April 29, 2009

கூற்றத்தை கையால் விளித்தற்றால்



திறமையானவர்களை திறமை இல்லாதவர்கள் எதிர் கொள்ள முற்படுவத்து எமனை தானே சென்று கூப்பிடுவது போன்ற செயலாகும்.

இதை வள்ளுவன் அழகாக சொல்கிறார்

கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவாருக்கு

ஆற்றாதார் இன்னா செயல்(894)

ஈழப்பிரச்சனை கடந்த 30 வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு அரசும் வரும் போகும் ஆரம்ப காலத்தில் ஈழத்து பிரச்சனைக்கு தெற்கிலும் டில்லியிலும் சில அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்தனர். அதன் பிறகு கூட்டனி என்ற ஸ்திரமற்ற ஆட்சி முறை மத்தியில் வர துவங்கியது. இதனை அடுத்து வெளிநாட்டு கொள்கையில் சிக்கலான பல முடிவுகளை கூட்டனி கட்சிகளின் வற்புறுத்தலாம் எடுக்க வேண்டி இருந்தது.

சில கட்சிகள் தங்களில் வசதி வாய்ப்பிற்கேற்ப அரசாங்கத்தை பயன்படுத்தி கொண்டனர். இந்த நிலையில் ஒரு அரசியல் தலைவர் சிலரது சூழ்ச்சியினால் கொல்ல படுகிறார். இதை ஒரு ஈழவிடுதலைக்காக போராடுபவர்கள் மீது சுமத்தி விட்டு இந்தியாவில் இருந்து அந்த இயக்கத்திற்கு நிறந்தரமாக வாசலை மூடினார்கள். இந்த நிலையில் செத்து போன அரசியல் தலைவரின் கட்சி வந்து சென்றாலும் அதற்கு தெற்கிலும் வலுவான கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை.

இதே நேரத்தில் சிங்கள அரசிற்கு போராளிகளை எதிர்க்கும் திறமை சுத்தமாக இல்லாமல் இருந்தது. போதிய படைபலம் உலக நாடுகள் உதவி என இருந்தாலும் போராளிகளுடன் போராடும் திறமை அவர்களிடம் இல்லாமல் இருந்தது. சரியாக திட்டமிடப்படாமை, தனது நாட்டு பகுதியின் பூகோள அறிவு குறைவாக இருந்தது போன்றவை சிங்கள ராணுவத்தின் நிறந்தர குறைபாடுகள்.

இந்த நிலையில் இந்திய அரசில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைக்கிறது. அதற்கு உறுதுனையாக தமிழக கட்சிகள், உறுதுணையாக இருக்கும் இரண்டு கட்சிகளுமே பணத்திற்கு விலைபோகும் கட்சிகள். அந்த கட்சி தலைமைக்கு அந்த தலைமையின் குடும்பத்திற்கும் சிறப்பு கவனிப்புகள் கவனிக்க பட்டது. அதன் பலனான திறமை அற்ற சிங்களவனுக்கு நேரிடையாக உதவ போராளிகளை அடக்க களம் இறங்கியது இந்தியா.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது இந்திய அரசின் திறமையை இரவல் தான் வாங்கியது. இந்தியாவில் நாளை ஆட்சி மாற்றம் வந்த பிறகு இந்த இரவல் திரும்ப பெறப்படும். சில நேரங்களின் கட்சிகளின் அழுத்தால் உலக நாடுகளின் கண்டிப்பால் சிங்கள அரசை இந்தியா நட்டாற்றில் விட்டு விடும். அப்போது சிங்களம் என்ன செய்யும்.

போராளிகளை நாம் குறைவாக எப்போதுமே மதிப்பிட முடியாது. சில நூறு போராளிகள் கூட பெரும்படையை அடித்து விரட்டும் திறன் படைத்தவர்கள். இதை சிங்களவனே மறுக்கமாட்டான். இந்த நிலையில் இந்தியாவில் பெருத்த அரசியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே முடித்து விடுவோம் என்று தோள்தட்டி இறங்கியவர்கள்.

முடிவில்லாமல் நட்டாற்றில் நிற்கின்றனர். உலக நாடுகளின் அழுத்தம் இன்ன பிற காரணங்கள் சிங்கள அரசின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டது. அமேரிக்காவின் வற்புறுத்தலாலும் கண்டிப்பாலும் இந்தியா தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு சிங்களம் வரதுவங்கிவிட்டது. திறமையுள்ள போராளிகளை தவறாக மதித்த காரணத்தால், சிங்கள அரசின் எதிர்காலம் தற்போதுகேள்விக்குறியாகிவிட்டது.

இதைத்தான் வள்ளுவன் கூற்றத்தை கையால் விளித்தற்றால் என்று கூறுகிறார்

No comments: