அல்லற்பட் டாற்று அழுதகண்ணீர்
மும்பை,சித்திரை.12
வள்ளுவன் கொடுங்கோல் செய்யும் அரசனைபற்றி இவ்வாறு கூறுகிறார். கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அழுத கண்ணீரே அந்த அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாக மாறிவிடும்.
அல்லற்பட் டாற்று அழுதகண் ணீரன்றே
செல்வத்தை தேய்க்கும் படை(555)
நேற்றா இன்றா கடந்த அரை நூற்றாண்டுகளாக சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீது ஏவி விட்ட அடக்கு முறை கொஞ்சமா நஞ்சமா, எத்தனை எத்தனை உயிர்களை இழந்தோம். இழந்த உயிர்களின் உறவுகள் அழுத கண்ணீர் இன்று சிங்களத்தை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு கொண்டு இருக்கிறது.
இலங்கை என்ற நாடு ஒன்று இருந்தது அந்த நாட்டின் பூர்வகுடி தமிழர்கள் வரலாற்று சான்று உண்டு இதற்கு ஆனால் இதில் கொடுமை என்ன வென்றால் நம்மவர்களே இன்று சொல்கிறார்கள் பிழைக்க போன இடத்தில் எதற்கு தனி நாடு கேட்கிறர்கள் என்று.
சுமார் 6-ம் நூற்றாண்டில் பவுத்த மத துறவிகள் இலங்கை சென்ற பிறகு சிங்களம் உருவாகிறது. அங்கு சென்ற பவுத்தர்கள் பேசிய பாலி வட மொழியும், அங்கு ஏற்கனவே வழக்கில் இருந்த தமிழும் இனைந்து கலந்து உருவானதே சிங்கள மொழி இந்த சிங்களம் கூட தமிழ் வார்த்தைதான் இதைத்தான் பாரதியார் “சிங்கள தீவினிற் கோர்” பாலம் அமைப்போம் என்றார். வரலாற்று முடிவுகளை அடுத்து ஆங்கிலேயேர் ஆதிக்கத்தில்
வருகிறது. பலவருடங்களாய் ஆங்கிலேயரின் ஆழுமைக்கு கீழ் இருந்த இலங்கையின் விடுதலைக்கு தமிழனும் சேர்ந்துதான் பாடுபட்டான். சென்றாலும் சென்றான் ஆங்கிலேயன் சிங்களவனின் கைகளில் அதிகாரத்தை தந்துவிட்டு சென்றான்.
அதன் பிறகுதான் தமிழருக்கு கலிகாலம் வந்தது இலங்கையில் இறுதியாக தமிழர்களுக்கு அரசியலில் எந்த அதிகாரமும் கிடையாது என்ற சட்டம் இயற்ற பட்டது.தமிழர்கள் இரண்டாம் குடிகளாக நடத்தபட்டனர், அரசு அலுவலக பணியாலும் சரி சாதரன ஒப்பந்தங்கள் எல்லாம் சிங்களமே முக்கியம் என்றது. பூர்வீக மண்ணுக்கு சொந்தக்காரன் அங்கு அடிமையாக்க பட்டான்.
அகிம்சை படுபாதாளத்தில் வீழ்ந்து மாண்டு போனது இலங்கையில் , இந்த நிலையில் இலங்கை சிறிலங்காவானது , தமிழுக்கு உரிமை மறுக்கபட்டது. இதை எதிர்த்து செல்வா தலைமையில் அகிம்சை முறையில் போராடினார்கள். போராட்டத்திற்கு கிடைத்த பரிசு தமிழின படுகொலை, மகன் கண்ணேதிரே தாய் தங்கை கற்பழிக்க பட்டாள், தாயின் கரங்களில் இருந்து குழந்தை பறித்து சுவற்றி தூக்கி வீசப்பட்டு கொலை செய்யபட்டது. மனைவியை கட்டி போட்டு அவள் கண் எதிரிலேயே கணவனின் கைகால்கள் வெட்டபடுகிறது.
இவை அனைத்தும் ஆட்சியாளர்களின் கண்முன்னே நடந்தது. இந்த கொடுமைகளை கண்டு ரத்தம் ஓட்டம் கொண்ட மிருகங்கள் கூட சீற்றம் கொண்டு கிளர்ந்தெழும் ஆனால் மனிதன் சும்மா இருப்பான எடுத்தான் ஆயுதம் , அதை கண்டது துண்டை கானோம் துணியை கானோம் என ஓடியது சிங்களம். உலகெங்கும் போய் இதோ பயங்காரவாதி என்று முறையிட்டது.
சுரண்டி பிழைக்கும் நாடுகளுக்கு சுரண்ட ஒரு நாடுகிடைத்துவிட்டதே என்ற களிப்பில் அவனுக்கு சாதகமாக நடக்க விளைவு இன்று உலகமே கண்டிராத ஒரு அவலம் நடந்து கொண்டு இருக்கிறது. நூற்றாண்டுகளாக தமிழ்த்தாய் தனது குழந்தைகளின் நிலைகண்டு வடித்த கண்ணீர் சும்மா விடாது. எங்கும் அழுகுரல் சிங்களவன் சிரிக்கிறான். அவனுக்கு சாமரசம் வீசும் இந்தியாவும் சிரிக்கிறது.
எம் பாட்டன் வள்ளுவனின் வாக்கு பொய்த்தாக சரித்திரம் கிடையாது. கொடுங்கோலனின் கையில் பட்டு சிதைந்து உயிர் இழந்து , பெற்றோரை இழந்து அனாதைகளாக அழுது பிரளும் குழந்தைகளின் கண்ணீரின் ஒவ்வொரு சொட்டுக்கும் ஒட்டு மொத்த சிங்களவன் பதில் சொல்லிஆக வேண்டும். மனிதரை கொன்ற மாபாவிகளுக்கு துணை நின்ற அத்தனை ஜென்மங்களும் அல்லல் பட்டு ஓடும் இது சத்தியம் இது நடக்கும்
நாளை சிங்களவனின் மண்ணில், அன்று எங்கள் ஈழம் அமைதி பூவீசும். தமிழ்த்தாய் பட்ட காயங்களுக்கு அவளின் புதல்வர்களும் புதல்விகளும் பூங்கரத்தால் ஒற்றடம் கொடுப்பார்கள். இது நடக்கும் அந்த நாள் தூரமில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment