April 24, 2009

பிரதம ஓட்டபந்தயம்சித்திரை,11

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டில் பல கலாச்சார மக்கள் வாழ்கின்றனர். ஒரு வாழ்விடத்தில் உள்ளவர்களின் மொழி மற்றவர்களுக்கு புரியாது உதாரனத்திற்கு ஆந்திராவில் உள்ள ஒருவர் பக்கத்து மாநிலமான மராட்டியத்திற்கு சென்றால் மராட்டி அல்லது இந்தி தெரிந்திருக்க வேண்டும் இல்லை என்றால் பக் பக் என்று விழிக்க வேண்டியது தான். தமிழ்நாட்டில் அதைவிட வித்தியாசம் இந்தியநாட்டின் ஆட்சி மொழியான இந்தி பேச்சுக்கு கூட கிடையாது.

ஆனால் ஒன்றுபட்ட இந்திய தேசத்தில் தமிழகவும் ஒரு மாநிலம்.

இப்படி விசித்திரம் நிறைந்த நாட்டில் புத்திசாலிகள் எளிதில் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். ..ஸ் படித்தலும் சரி பல ஏக்கர் நிலமுள்ள பெரிய ஜமீன் தார் ஆனாலும் சரி நேற்று உங்கள் வீட்டிற்கு பால் ஊற்றிய பால்காரன் இன்று உங்களை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றும் ஆற்றல் வந்துவிடும் , உங்களது வயலில் கூலிக்கு களை பறித்தவர்கள் உங்களுக்கு இன்கம் டாக்ஸ் என்று மிரட்டல் விடக்கூடும் எப்போது அரசியலில் சேர்ந்து தேர்தலில் நின்று டில்லியிலோ அல்லது உங்கள் மாநிலத்திலோ எம்.எல். அல்லது எம்.பி என்ற பட்டம் வாங்கி விட்டால் அதெல்லாம் சும்மா அரசியல் கட்சியில் தொண்டனாகி அதன் பிறகு அதில் பதவி கிடைத்து அதன் பிறகு

மக்களிடம் பிரபலமாகி அதன் பிறகு வட்டம், மாவட்டம், நகரமாகி பிறகு என்று நினைத்தால் நீங்கள் இன்னும் மாமா நேரு , தாத்தா காந்தி காலத்தில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

திகைப்பாக இருக்கிறதா இதோ இந்த முறை நான் தான் பிரதமர் என்று சொல்லிம் சிலரின் பயோடேட்டாவை பாருங்கள்.

நம்பர் 1 மாயாவதி

பிரதமர் ஓட்டபந்தயத்தில் முதல் முதலாக பேசப்பட்டவர். என்னை பிரதமராக்க முடியும் என்றால் மூன்றாவது அணிக்கு வருவேன் என்று பகிரங்கமாக கட்டளை இட்டவர். ஆனால் பாவம் அறிவாள் கத்தியால் சீரணிக்க முடியவில்லை . 75 வருடங்களாக கட்சியில் நடந்து வந்து தற்போது நரைவிழுந்த பிறகு பதவிக்கு வந்த பல தலைவர்கள் இருக்கும் போது நேற்று பெய்த மழையில் @? .காம் பிரதம மந்திரி பதவிக்கு அப்பீல் செய்வது ஜீரணிக்க முடியவில்லை. அவர்களுக்கு தான் ஜீரணிக்க முடியவில்லை ஆனால் மாயாவதி பிரதமாராக கூறியது ஏன்.

மாயாவதி அவரது பெயரிலேயே மாயா இருக்கிறது. சட்டகல்லூரி மானவி, சட்டம் முடிந்த பிறகு கன்சிராமின் உதவியாளர். கன்சிராம் தலித் மக்களின் மற்றோரு அம்பேத்காராக முயன்றவர்

ஆனால் ஏற்கனவே ஒரு அம்பேத்காரால் நாங்கள் பல சொகுசுவாழ்க்கைகளை இழந்து விட்டொம் இதில் இன்னோரு அம்பேத்கார் தோன்றினால் நமது பாடு திண்ணாட்டம் என்று சொல்லி அவருக்கு எதிராக கொஞ்சம் நஞ்சம் மீதம் இருந்த தலித் கட்சிகளின் தலைவர்களை திரட்டி அதை இதை கொடுத்து அவரை வளரவிடாமல் ஆக்கிவிட்டது.

தனது பேப்பரை விற்று கட்சியை நடத்தியவர். இன்று அவரது வழிவந்த மாயாவதியில் சொத்து மதிப்பு(சாரி கட்சி நிதி) கோடி மேல் கோடி . எப்படி பொதுவாக அரசியலில் ஒரு நிதி மக்களிடம் பெயர் வாங்கி அவர்களின் ஆதரவுடன் தேர்தலில் நின்று அதன் பிறகு ஆட்சியில் அமர் வது ஆனால் எழுதபடாத விதி மணி ஹனி. ஆம் ஒரு ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய அரசியல் கட்சிகளின் பின்னால் நின்று அவர்களுக்கு படியளந்து படியளந்து அலுத்து போன தொழில் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திர மாயா மேடம். ஆம் இவரது கட்சியில் உள்ள அனைத்து வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறைந்த பட்சம் 10 கோடிக்கு மேல் அதிக பட்சம் 144 கோடி. இங்கு சாதி இல்லை பேதமில்லை அதிர்ச்சி அடைய வேண்டாம் பணம் இருந்தால் போதும் காரணம் நேரடியாக அரசியலில் இறங்கும் தொழில் அதிபர்கள் பெரிய கட்சிகள் இனிமேல் நம்மிடம் கொஞ்சவேண்டும் என்று மாயா மேடம் சொல்ல மந்திர கோலுக்கு கட்டுபட்டவர்கள் அவரின் வேட்பாளர்கள்.

விளைவு உத்திரபிரதேசம் தனது சோதனை ஓட்டத்தை முதலில் உத்திர பிரதேசத்தில் நடாத்தி காண்பித்தது கிரேட் வெற்றி ஆம் இந்திராகாந்தி பிரியடில் கூட காங்கிரஸ் பெறாத வெற்றி தனி பெரும்பாண்மையை பிடித்து உத்திர பிரதேசத்தி மாயா மகாராணி ஆனார். இந்த முறை மராட்டியம், டில்லி, உத்திர பிரதேசம், ஹரியான, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சோதனை ஓட்டம் ரகசிய தகவல்கள் மாயாவிற்கு 60 சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று வர மாயா மிஸ் பி.எம் ஆக துண்டை(சாரி)துப்பட்டாவை முதலில் சீட்டில் போட்டு உட்கார இடம் பிடிக்க முயற்சிக்கிறார்.

நம்பர்.2 லாலு பிரசாத் யாதவ்

ஒட்டு மொத்த குடும்பம் 40 வருடங்களுக்கு முன்பு விவசாயம் இருந்ததோ சில ஏக்கர் ஜமீன், நிறைய குழந்தைகள் இதுதான் இவர் அப்போதைய சொத்து. தனது மைத்துனர்கள் மற்றும் பகுபலி எனப்படும் உள்ளூர் ராஜாக்களின்(ரவுடி) ஆதரவுடன் பிகாரில் 3 முறை முதல் மந்திரி எதற்காக மந்திரி ஆனாரோ அதை நடத்திகாட்டினார். மாட்டு தீவனம் வாங்கியதில் கூட கோடிகளில் கைவைத்தவர்.

மற்றவைகளை சும்மா விடுவாரா ஆனால் இது சுதந்திர இந்தியா இங்கு எவ்வளவு கோடிகளை கொள்ளை அடிக்கின்றீர்களோ அவ்வளவு பெரிய மனிதர்கள், அதற்கு முக்கிய முகமூடி அரசியல் வாதியாக இருக்கவேண்டும் . பீகாரில் இருந்து டில்லி வந்தார் அதாவது பாராளுமன்றத்தில் அதுவும் பள்ளிக்கூடத்தையே பார்க்காத தனது மனைவியை முதல் மந்திரி ஆக்கிவிட்டு டில்லி சென்றார் வாரே பீகாரி

கொள்ளை அடித்தவர்களை கூட்டு சேரத்தால் புதிய ஐடியாக்கள் கிடைக்கும் என்ற விதியின் படி பரம்பரை பரம்பரையாக இந்தியாவை கொள்ளை அடிக்கும் (மன்னிக்கவும்) ஆட்சி புரியும் அக்ரிமெண்ட் போட்ட காங்கிரஸ் அதற்கு ஏதுவாக தனது கூட்டனியில் லாலுவை சேர்த்தது, ரயில்வே மந்திரி பதவி பதவிக்கு வந்தவுடன் இது ரெயில் இலாக இங்கு மாட்டு தீவினம் கிடையாது கொள்ளை அடிக்க என்று இருந்தவருக்கு ஐடியா பிறந்தது. ரெயில்வேயின் அசையும் சொத்துக்கள் கோடிக்கணக்கில் இந்தியாவெங்கும் கொட்டி கிடைக்க இதில் கைவத்தார். தனக்கு மிஞ்சி தானம் என்ற கொள்கைக்கு ஏற்ப கொட்டும் பணத்தில் கொஞ்சம் சலுகைகளும் காண்பித்தார்.

இவரின் இந்த ஐடியாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து சில பல்கழைகழகங்கள் பாராட்டியது (கொடுமை) டில்லியில் மந்திரி பதவி ருசி கண்ட இந்த பூனை எடுத்த அடுத்த முடிவு மந்திரிக்கே இவ்வளவு சம்பாத்தியம் என்றால் மந்திரிக்கேல்லாம் மந்திரி தலைமை மந்திரி ஆகிவிட்டால் இந்த திடீர் யோசனை அவரையும் பிரதமராகும் கனவில் விட்டு விட்டது. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால் பிரதம பதவி சுலபாக கிடைக்காது என்ற எண்ணத்தில் அதிக எண்ணிக்கையில் எம் பிக்களை பெற 4 :0( கூட்டணி அமைத்தார்.

உதவியாக முலாயம் சிங் யாதவ் இவருக்கு துணை பிரதம மந்திரி பதவி அளிக்கபடுமாம், ராம் விலாஸ் பாஸ்வான் இவருக்கு உள்த்துறை தரப்படுமாம் தனது எண்ணத்தை சொல்லியும் விட்டார். தேவ கவுடா பிரதராகிறார் நான் ஆக முடியாதா என்கிறார். என்டே ஈஸ்வரா இந்தியாவை ரச்சியும்,

நம்பர் 3 சரத்பவார்

ரூ1. 23 லட்சம் இவரது 1965-ம் ஆண்டில் இருந்த சொத்து சொந்த மாக நிலம் கொஞ்சம் இருந்தது. இவர் கிரிகேட் அமைச்சராக (சாரி வாரிய தலைவராக இருந்தவர்) யூகித்து கொள்ளுங்கள் கால்குலேட்டர் குழம்பி போகும் இவரது சொத்துக்களை கணக்கு போட்டால், சோனியா இத்தாலிகாரர் அவர் எப்படி பாரம்பரிய காங்கிரசுக்கு தலைவராக லாம் என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்.

உண்மையில் அந்த பதவிக்கு அவர் வரவேண்டும் என்று கனவு கண்டார்

. தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி அதற்கு தலைவராகி தனது ஆசையை பூர்த்தி செய்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் தலைவரானால் அடுத்த படி பிரதமந்திரி அந்த கனவு போகவில்லை. எப்படியும் 2009- பிரதம மந்திரி ஆகவேண்டும் என்ற வேகம் அவரது ஊரிலேயே ஒரு வாரத்தில் 70 விவசாயிகள் தற்கொலை செய்தார்கள்

சரத் பவார் விவசாய மந்திரியும் கூட. ஆனால் கிரிக்கேட் ஏன் கிரிக்கேட் இந்தியாவில் எத்தனையும் கோடி சம்பாதியுங்கள் கேள்வி கேட்ட மாட்டோம். நீங்கள் கொடுக்கும் கணக்கு தான் கணக்கு என்ற சுதந்திர கொள்கை கொண்ட ஒரு அமைப்பு கிரிக்கேட் வாரியம். கிரிக்கேட்டை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. எல்லாம் தயாராகிவிட்டது. இவரும் சொல்கிறார் பிரதம மந்திரி ஆக எம்.பி களின் எண்ணிக்கை தேவை என்கிறார்.

அதற்கு காங்கிரஸ் கூட்டனியில் இருந்து கொண்டே 3 அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். 40 வருடமாக வளர்ச்சியை காணாத ஒரு மாநிலம் ஒரிசா அந்த மாநிலத்தில் பி.ஜு சனதா கம்யூனிஸ்டுகள் , இங்கு அம்மா உடனும் ஒரு ரகசிய உடன்பாடு, சந்திர பாவுபுடனும் நட்பு, சிரஞ்சீயுடன் தார்மீக ஆதரவு . எப்படியும் எண்ணிக்கை வேண்டும் அல்லாவா இவர்கள் பிரதமர் ஆனால் இந்தியா என்ற நாடு எங்கே செல்லும் இவர்களின் ஆட்டம் பாட்டங்களை பார்த்து இரண்டு பெரிய கட்சியான காங்கிரஸ் அடுத்து ஆட்சியில் அமையும் என்று எதிர்பாக்கும் பாரதிய சனதா

மிரண்டு போய் இருக்கிறது.

இன்னும் வரிசையில் இருக்கிறார்கள்

நம்பர் 4-ல்

ஜெயலலிதா 40/40 கிடைத்தால் அம்மாதான் பிரதம மந்திரி அதனால் தான் ஈழபிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.

நம்பர் 5-ல் காரத் பிரகாஸ்

காரத் நேற்று வந்தவர்கள் ஆசைப்படும் போது நான் ஏன் ஆசைப்படக்கூடாது

என்று நினைத்தார் போலும்.

நம்பர் 6

நமது வீட்டிற்கு பால் ஊற்றும் பால்காரன்

நம்பர் 7

பேப்பர் காரன்

நம்பர் 8 காய்கரி கடைக்கார அம்மா

நம்பர் 9 ராப்பிச்சைகாரர்

நம்பர் 10

நீங்கள் கூட முயற்சி செய்யுங்கள் ஏன் என்றல் இது இந்தியா இங்கு யாவரும் மன்னர்கள்

வள்ளுவர் சொல்லி இருக்கிறார் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

No comments: