April 24, 2009

பருகுவார் போலினும் பண்பிலார்


மும்பை, சித்திரை. 11

2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் பிரான் சொல்லி சென்றது

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனியது

(தீ நட்பு: 811)

நல்லது செய்வது போல் அதிகமாக நாடகம் நடத்தினாலும் நல்ல குணமில்லாத தீயவரது நட்பு நாளுக்கு நாள்பெருகுவதை விட குறைந்து போகும். சிங்கள அரசின் நிலமை இன்று வள்ளுவனின் குறள் போல் ஆகிவிட்டது. சிங்கள அரசு ராஜபக்சே கையில்வந்த சிறிது காலத்தில் இந்திய அரசில் காங்கிரஸ் ஆளுமை வந்து விட்டது. சிங்கள அரசில் முக்கிய பதவிகளை இந்திய அரசியல் வாதிகள் போல் முழுகுடும்பமும் ஆள்வதால் காங்கிரஸ¤க்கு ஒரு பாதை திறந்து விட்டது போல அகிவிட்டது. காங்கிரஸின் முழுமையான ஆசை பெரியார் கொண்டு வந்த திராவிடம் உலகை விட்டே மறைந்து விடவேண்டும். ஈழத்தில் புலிகளின் ஆளுமை இருக்கும் வரை அது சாத்திய படாது அதனால் புலிகளின் பலத்தை குறைக்கவேண்டும்.

ஆனால் ஆட்சி அதிகாரம் மேலும் இலங்கையில் முழுவதுமான குடும்ப அரசியல் பிறகெண்ண வேண்டும் சோனியாதலைமையினானால காங்கிரஸிற்கு. நிதானமாக இறங்கியது தமிழின அழிப்பு கொள்கையில் காங்கிரஸில் உண்மையான நோக்கம் போராளிகளை அடக்கி விட்டு சிங்களம் மற்றும் ஈழத்தில் அமைதியை ஏற்படுத்துவது அல்ல. அதன் நோக்கம் ஈழத்திலும் தனது பரம்பரை ரியல் ஏஸ்டேட் நடத்தும் பிஸினசை நடத்துவது தான். இது உண்மை நேற்று அமேரிக்கவீன் ஜார்ஜ் புஸ் ஈராக்கில் நடாத்தி ஒரு மறைமுக ஆளுமையை கொண்டு வந்தது போல், தெற்காசிய நாடுகளின் வல்லரச்சான இந்தியாவிற்கும் ஒரு நப்பாசை ,

கொஞ்சம் திராவிர கொள்கை உடையவர்களை அடக்கியது போல் ஆகிவிட்டது.அதே நேரத்தில் தனது பரம்பரைக்கும் சிங்கள தீவிலும் பிஸினஸ் நடத்த வழிகோலுவது போன்ற முடிவில் இருந்தது. ஆனால் சானை தீட்டினால் பறக்கும் தீப்பொறிக்கு பயந்தோடும் கூட்டமல்ல தமிழினம். எரிமலை வந்தாலும் அதை தாங்கும் சக்தி கொண்டது எம் இனம். நீண்ட நோடிய வருட திட்டமிடல் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது உறுதியில்லை இன்றே செய் என்ற ஒரு அழுத்தம். முதலில் நட்போடு காங்கிரஸ் அரசு மற்றும் அதன் உத்தரவிற்கு அடிவருடும் அரசு அதிகாரிகள் சிங்கள அரசிடம் பசப்பு வார்த்தைகள் கூறி மயக்கியது.

வள்ளூவன் கூறியது போல் நல்லது செய்வதை போல் நாடகம் நடத்தினார்கள் காங்கிரஸில் நோக்கம் அமைதியான சிங்கள தீவு அல்ல தனக்கு போட்டியாக முழு வலிமையுடன் தோன்றும் போராளிகளை அடக்கிவிட்டு ஈழத்திவில் ரிலைன்ஸ், எஸ்ஸார், மாருதி, போன்ற பணம் தின்னும் பிணங்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் பரம்பரை பங்கிட்டு கொள்வது தான். ஆனால் இது கொஞ்சம் கூட தெரியாமல் ராஜ பக்சே அன்ட் கம்பேனி காங்கிரஸ் தலைமையினாலான அரசு தங்களுக்கு புது ஜென்மம் அளிக்கிறது என்ற சந்தோசத்தில் இருந்து. இந்த சந்தோசத்திற்கு அடி கிளிநொச்சி வீழ்ந்த போது விழுந்தது. கிளி நோச்சியில் நுழையும் வரை ஒரு சாதாரன மனிதருக்கு தெரியாது கிளிநோச்சி 3 மாதங்களுக்கு முன்பே காலியாகிவிட்டது என்று அப்போதே விபரீதத்தை உணர்ந்த சிங்களம் வேண்டாம் என்றது ஆனால் வள்ளுவன் சொன்ன தீ நட்பு அல்லவா காங்கிரஸின் நட்பு இதை புரிந்து கொள்ளவில்லை.

காங்கிரஸின் அத்தனை ஆளுமைக்கும் ஆமாம் சாமி போட்டது. விளைவு இன்று உலகம் எங்கும் சிங்கள அரசுக்கு எதிரான மணப்பாண்மை ( .நா வின் வேண்டுகோளை விட்டுதள்ளுங்கள் ஏன் என்றால் நம்பியார் நியூயார்க் செல்லும் முன்பு இந்தியாவில் தங்கிவிட்டு சென்றார்.

இந்தியாவில் அவர் தங்கி இருந்த போது எம்.கே நாராயனன், மேனன், மற்றும் பிரனாபீன் உதவி செயளாளர் மானஸ் ராய் போன்றோர் நம்பியாரை சந்தித்து உள்ளனர். இந்த சத்திப்பில் இருந்தே என்ன நடந்திருக்கு என்று ஊகித்து இருப்பீர்கள். நாம் ஊகித்தது சரியா நேற்று வரை சிங்களம் போரை நிறுத்து என்று கூறிய .நா இன்று போராளிகள் ஆயிதங்களை கிழே போடுங்கள் என்கிறது. நம்பியார் நேராக நியூயார்க் சென்றிருந்தால் இந்நேரம் அறிக்கை வேறு மாதிரி இருந்து இருக்கும்.

ஆனால் ஈழத்தமிர்கள்விடயத்தில் நம்பியாருக்கு காங்கிரஸ் அரசு அதிகமாக ஊற்றி கொடுத்து விட்டது. லட்சக்கனக்கில் மனித அவலம் ஏற்பட்டும் சர்வ சாதாரணமாக போராளிகள் போரை நிறுத்த வேண்டும் சரனடைய வேண்டும் என்று அறிக்கை விடுகிறது.

"அதாவது ஐ. நா என்ற அமைப்பு வேற்று ஒரு கிரகத்தில் இருந்து நேற்று வந்து போலவும் அதற்கு சிங்கள ராணுவம் செய்த அரக்கத்தனங்கள் எதுவும் தெரியாது போலவும் நடந்து கொண்டது. போராளிகள் கடந்த ஒரு வருடமாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது. ஆனால் தீ நட்பு காங்கிரஸின் உருவத்தில் இருந்து சிங்களவனை திசை திருப்பிகொண்டு இருக்கிறது".

இந்த தீய காங்கிரஸ் நன்பரின் விளைவு உலகம் எங்கும் ராஜபக்சே தலைமையில் ஆன சிங்கள நாட்டிற்கு அவப்பேயர். இதைத்தான் வள்ளுவன் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னான் தம்பி கரையான் கூட்டை உறுதியானது என நம்பி அதில் குடியேறாதே சிறிய மழை வந்தால் கரைந்து உண்ணை நட்டாற்றில் விட்டு விடும் அது போல் தீயவர்களின் நட்பு நாளடைவில் பெருகுவதை விட , குறைந்து கொண்டு பொகும் அதற்கு ஒரெ வரலாற்று உண்மை எடுத்துகாட்டு நயவஞ்சக காங்கிரஸோடு நட்பு கொண்ட சிங்கள ராஜபக்சே அரசு

No comments: