முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே
முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாத அரசுகள் முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.
முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்(640)
குடிமக்களை கவனத்தில் கொள்ளாதது
சிங்கள தேசத்தின் ஆரம்பகால அரசியல் வளர்ச்சியை கூர்ந்து நோக்கினால் ஒன்று புலப்படும் அதாவது வள்ளுவனின் குரள் போல சரியான திறமை இல்லாத அரசுகளும் ஆமாம் சாமி போடும் அமைச்சுகளும் சிங்களத்தில் இருந்தது தெரியவரும். ஆரம்ப காலங்களில் புவியின் நிலப்பரப்பில் வாழும் மக்களின் வாழ்வு வளம் கருத்தில் கொள்ளாமல் சட்டமியற்றிய் போதே இதற்கு முடிவு .
இந்திய அரசியலமைப்பு
இதே நேரத்தில் இந்தியாவை எடுத்துகொண்டால் கொண்டால் காலங்காலமாக தீண்டாமை கொடுமையில் உழன்று வந்த ஒரு இனத்தின் தலைவர் தனது இனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மேலும் நாட்டில் உள்ள உயர்குடிக்கும் இடையூறின்றி அனைத்து மக்களின் எதிர்காலம், வாழ்வு முறை, கல்வி, பெருளாதார மேம்பாடு, சட்ட பரவல் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியான சட்ட மியற்றினார். இதன் காரணமாகத்தான் இன்று பல காலாச்சாரம், மொழி மற்றும் பல விடயங்களில் வேறுபட்டு இருந்தாலும் அனைவரின் உள்ளத்திலும் இந்தியா எனது நாடு இந்த நாட்டில் எங்கு சென்றாலும் எனக்கு வாழ உரிமை உண்டு என்று ஒரு எண்ணம் பிறப்பிலேயே தோன்றிவிடுகிறது.
இதன் காரணமாகத்தான் உத்திரபிரதேச காரன் தீடிரென பெட்டி படுக்கை தூக்கி கொண்டு மும்பாய்க்கு கிளம்பி விடுகிறான்.
மார்வாடி சட்டென்று கடைபோட்டு வட்டிக்கு விட காந்திநகரில் இருந்து காரைக்குடிக்கு வந்துவிடுகிறான். திருநெல்வேலிகாரணும் இட்லி சட்டியை தூக்கிகொண்டு கோலிவாடாக்களுக்கு வந்து விடுகிறார்கள். காரணம் இந்த நாட்டின் சட்டத்தில் ஒரு நம்பிக்கை, பாதுக்காப்பில் உறுதி.
தேவைகளை கணக்கில் கொள்ளாமல்
ஆனால் சிங்களம் அப்படியா சட்டங்களை இயற்றும் போதே கொடுபிடி என்று ஒரு நாடு தனது நாட்டின் குடிமக்களில் ஒரு பாலரை சிறுபாண்மையினர் என்று சொல்லிகொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டதோ அந்த நாட்டில் வளர்ச்சி என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகி போய்விடும். காரணம் தகுந்த அமைச்சுகளும் அரசுகளும் சிங்கள நாட்டிற்கு கிடைக்கவில்லை.
இடியாப்ப சட்டவடிவம்
ஆரம்பகாலதிலும் சரி இன்றும் சரி, ஆரம்ப காலங்களில் சீன நாட்டின் குழப்படியான கம்யூனிச கொள்கையையும் மேற்கத்திய முதலாளித்ததுவத்தையும் கலந்து கலப்படமான ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இது ஆங்கிலேயன் விட்டு சென்ற சட்டத்தையும் சேர்த்து கொண்டு இடியாப்ப சிக்கலான சட்ட முறைமையை கொண்டு வந்தால், குழப்பம் ஏற்பட்டு சில வருடங்களிலேயே புதிய சட்டமொன்றை இயற்றவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
பூர்வீக குடிகளை புறக்கணித்தல்
அப்போதாவது தனது நாட்டில் பூர்வீக குடிகளாக வாழும் தமிழர்களை கூட இணைத்து கொண்டு அவர்களிடமும் யோசனைகள் கலந்தாலோசித்து சட்டமியற்றி இருந்தால் இந்நேரம் சிங்கள தேசம் உலக வரைபடங்களில் முக்கியமான வளம்பெற்ற நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் ஆனால் துணை
சரியில்லாமல், கண்டவன் சொல் கேட்டு தமிழரை புறக்கணித்து சட்டமியற்றியது. சட்டம் இயற்றும் போதாவது இது தவறு இது சரி என்று சொல்ல தகுந்த அமைச்சர்கள் யாராவது இருந்தார்களா, அதுவும் கிடையாது.
சுயநலம் தேடும் அரசியலார்
ஏன் என்றால் தனி மனித சுயநலம், அரசியல் செய்து பிழைக்க வந்த சோம்பேரிகள் தனக்கும் தன் பரம்பரைக்கும் சொகுசாக வாழ என்னை வழி அதை மட்டும் கருத்தில் கொண்டு அதை சட்டமாக மாற்றிவிட்டது. ஏன் என்றால் ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் அந்த நாட்டின் அரசை நிர்ணயிப்பவர்கள்.
அரசியல் ஞாணசூனியம்
ஆனால் துரத்திஸ்டவசமாக தெற்காசியாவில் ஆங்கிலேயன் விட்டு செல்லும் போது மக்கள் அரசியலில் அவ்வளவாக ஞானம் பெற்றவர்கள் இல்லை. இந்த குறைபாட்டை அரசியாலார்கள் தங்களுக்கு வசமாக மாற்றி கொண்டார்கள். இந்த காரணத்தால் தான் இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி, மற்றும் வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் வாதிகள் தங்களின் தேவைக்கு ஏற்றார்போல் மக்களை மாற்றி அரசியல் ஞானம் கடைகோடி வரை செல்லாமல் பார்த்து கொண்டார்கள். இந்தியாவில் அரசியல் ஞானமில்லாமல் செய்வதற்கு இங்குள்ள சாதி மத வேறுபாடுகளை கையில் எடுத்து பிரிவினர்களுக்கிடையே அவ்வப்போழுது சண்டையை மூட்டி விட்டு தங்களின் அரசியல் கடையை சீராக நாடத்தி வந்தார்கள்.
ஆமாம் சாமி
ஆனால் சிங்களவனுக்கு இவ்வளவு சிரமபட தேவையில்லை , ஏற்கனவே தனக்கும் எந்த கருத்திலும் ஒன்று படாத தமிழர்கள், அரசியல் வாதிகள் என்ன செய்தால் நமக்கு என்ன நமக்கு மேலே நம்மாள் இருந்தால் போது என்று கண்மூடி கிடைக்கும் சிங்கள குடிமக்கள். இந்த விளைவுகள் தான் இன்று சிங்கள தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுகொள்வார்கள், மக்களின் ஆதரவு என்ற ஒன்று இருந்தால் போதும் என்ற நிலையில் கொடுங்கோலாட்சி புரிந்து வருகின்றனர். அங்குள்ள இவர்களின் செயலுக்கு ஆமாம் சாமி போட்டு வருகின்றனர்.
--
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment