April 26, 2009

காக்கை காரவா கரந்துண்ணும்

மும்பை, சித்திரை.13
வள்ளுவன் குறளில் பல விலங்குகளை உதாரணம் சொல்லி இருக்கிறான், களிரு, தாமரை, அண்ணம், காவரிமான் இன்ன பிற ஆனால் காக்கையை மட்டும் அபூர்வமாக சொல்லி இருக்கிறார்.

காக்கை காரவா கரந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள (527)

உணவை கண்ட உடன் தனது சுற்றத்தாரையும் அழைத்து கொண்டு வந்து உண்ணும் குணமுடையது காக்கை. ஏன் காக்கை உணவை கண்டது தனது உறவை அழைக்கிறது வைப்பது சிறுகரண்டி சோறு அதிலும் அரைமணி நேரம், கா கா என்று காலங்காந்த்தால கூப்பிட்டு துக்கத்தை கெடுக்கிறார்கள். காக்கை சோற்றை எண்ணிப்பார்த்தால் அதிகம் அதிகம் 200 பருக்கைதான் இருக்கும்.
சிறிது நேரத்தில் நமது வீட்டிலும் சோறுவைத்தவன் வீட்டிலும் சுமார் 20 காக்கைக்கு மேல்வந்து விடும். 200 பருக்கை இருக்கும் சிற்றிலை சோற்றை நான் மட்டும் தின்றுவிட்டு கிளம்பிவிடுவோம் என்ற சுய நல மணப்பாண்மை இல்லாமல் எனது உறவுகள், எனக்கு கிடைக்கும் இந்த சிறுபருக்கையிலும் அந்த உறவுகளுக்கு கொடுத்து உண்பேன் என்று கூறி அழைக்கிறதே அந்த உண்னத குணத்துடன் பிறந்த காகம் . இந்த காகத்தின் பெயரை அடிக்கடி உபயோகித்து அதன் மாட்சிமையை கொடுத்து கொள்ளக்கூடாது என்ற உண்ணத நோக்கில் தான் இப்படி சொல்கிறான்.

இன்று நம் தமிழினத்தில் நடப்பது என்ன! ஒரு புறம் சாகிறர்கள், ஒரு புறம் உண்ணாவிரதம், ஒரு புறம் போராட்டம், பல தீக்குளிப்பு , உலக நாடுகள் கண்டிக்கிறது ஆனால் இங்கோ கதை எழுதுகிறார்கள். கவிதை சொல்லுகிறார்கள், தகவல் அனுப்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய என்று கூட கேட்கிறார்கள் . நான் என்ன செய்ய வென்று மூளை சும்மா இருந்தா இன்னேரம் எல்லோரும் கோமாவில் இருப்போம். ஏன் இந்த கண்ணோட்டம் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு வேலை நடந்தாகவேண்டும், வயிறு நிறம்பியாக வேண்டும்.
யார் சாகிறர்கள், கரையானா, எறும்பா, இல்லை புழு பூச்சிகளா, ஒரு எறும்பு செத்தால் ஓராயிரம் எறும்புகள் ஒன்று கூடி தூக்கிசெல்லுமே கவனித்தீர்களா என் உறவுகளே, கரையாண் புற்றை இடித்து பாருங்கள் மறுநாள் உறுதியுடன் மீண்டும் அந்த புற்றை கட்டி தீர்க்கும் அதற்கு மூளை எத்தனை மில்லி கிராம், மைக்ரோ கிராம் கூட கிடையாது. ஆனால் மனிதன் தலை என்னும் உறுப்பில் 90 சதவிதம் மூளை கொண்டவன்.

உலகிலேயே அற்புத பிறவி, அந்த பிறவிகளிலேயே மிகவும் புத்திகூர்மையுள்ளவன் தான் தமிழன். ஒத்து கொள்ள மாட்டான் இந்த கூற்றை! யார்? மராட்டியன் அல்ல, சிங் அல்ல, பாலாஸ்தீனியன் அல்ல , ஏன் சிங்களவனும் அல்ல . தமிழனே ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன் என்றால் எங்கே நான் புத்திசாலி என்று தெரிந்தால் தன்னிடமும் உதவி கேட்டுவந்து நிற்பானோ என்ற பயம், காழ்ப்புணர்ச்சி, சுயநலம். அதிக நாட்கள் பின் செல்ல வேண்டாம்,
கடந்த வருடம் காஸாவில் இஸ்ரேல் குண்டு போட்டான். நானும் பல இஸ்லாமிய குழுமங்களில் உறுப்பினராக இருக்கிறேன். அது இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெரியும் , அந்த போர்கால கட்டத்தில் ஈகைக்குறிக்கும் வசனம் இருந்தது எப்படி அங்கு சாகிறார்கள் அவர்களுக்கு உதவுங்கள் என்று சொல்லி இருந்தது. கவிதை இருந்தது இஸ்ரேல் செய்யும் தீங்குதனைஉலகிற்கு எடுத்து
சொல்லும் கண்டிப்புமிருந்தது.

தகவல் இருந்தது இஸ்ரேல் எப்படி பாலாஸ்தீனியர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிடிங்கினான் என்று தகவல் இருந்து, இப்படி அந்த போர் முடியும் வரை தமிழ், அரபி, ஆங்கிலம், உருது, போன்ற யாகூ, மற்றும் கூகிழ் குழுமங்களிலும், வேர்டு பிரஸ், பிளாக்ஸ் போன்ற வலைப்பூக்களிலும் போரை பற்றி இருந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. எங்கே எந்த இஸ்லாமிய சகோதராவது இதை மறுக்கட்டும். ஏன் !! வலி எங்கோ மனிதம் துடிக்கிறது இங்கே தூக்கம் கேட்டு தவிக்கிறான். வேதனை உள்ளத்தில் கிடந்த வேதனை தான் எழுத்தில் வந்து விழுகிறது
.
எங்கே வேதனை பல்லாயிரம் கிலோ மீட்டர் தாண்டி இந்து, அரபி போன்ற இரு பெரும் சமுத்திரம் தாண்டி இருக்கும் ஒருநாட்டில் சாகிறார்கள் இங்குள்ளவர்கள் வேதனை படுகிறார்கள். அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காக மட்டும் அல்ல இந்தியாவும் கண்டனம் தெரிவித்து. ஆனால் இங்கே உனது உறவுகள், இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்த உனது பூட்டன் பூட்டியின் வாரிசுகள், உனது வீட்டின் அருகில் சாகிறது, வலியில் ஆழுகிறது, பசியில் துடிக்கிறது.
உனக்கு வடமொழியில் தமிழின் கலப்பு(இலக்கண ஆராய்ச்சியாம்), தமிழின் தொன்மை, சுற்றூலா போவோமே, வாடிப்போன வசந்த காலம் கவிதையாம், நமது இனத்தின் எதிர்காலமே எரிந்து போய் கிடக்கிறது, பக்கத்து வீட்டில் தீப்பற்றினால் அந்த தீ உனது வீட்டில் பிடிக்க கன நேரமாகாது நாம் நம் தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறோம்.

நாளை வரலாற்றை படிப்பார்கள் தமிழில் தான் படிப்பார்கள்,( தமிழ் சாமானியத்தில் சாகாது தமிழன் சாவான், கொல்லுவார்கள் அவனைத்தானே கொல்கிறார்கள் என்று சமாளித்து கொண்டு தமிழ் கவிதை புனைவான், கட்டுரை எழுதுவான்) இதே தமிழில் உங்களது குழந்தைகளில் குழந்தைகள் படிக்கும் 2009-ல் ஆயிரக்கணக்கில் தமிழர்களை குண்டு போட்டு சிங்கள ராணுவம் கொண்றது என்று அப்போது கேட்பான் உங்கள் பேரன் தாத்தா நீங்கள் எல்லாம் என்ன மாங்கா பறித்து கொண்டு இருந்தீரோ இப்படி சாகடித்து கொண்டு இருக்கும் போது என்று கேட்பான் காலம் வரும் நிச்சயம் கேட்பான் ! ! எங்கு வந்து கேட்பன் தெரியுமா

முதியோர் இல்லத்தில் பணம் கட்டினால் சேவை அது கொஞ்சம் லேட்டாக வந்தா யோவ் பெரிசு என்று அதட்டும் காப்பகத்தார் உண்ணை திட்டும் நேரத்தில்
உங்கள் மனம் என் பேரப்பிள்ளைகள் என்னை பார்க்க எப்போது வருவார்கள், எனது மகன் எப்போது இந்த மாத பீஸை கட்டுவான் என்று ஏக்கத்தில் இருக்கும் போது மாத முதல் நாளில் பீஸ் கட்ட வந்த மகனுடம் ஒட்டி கொண்டு வரும் பேரன் கேட்பான்.

என்ன சொல்வீங்கா இல்ல அப்ப நாங்க எழுதி கொண்டு இருந்தோம்,கவிதை எழுதிகொண்டு இருந்தோம் கட்டுரை வரைந்து கொண்டு இருந்தோம், தகவல் வழங்கி கொண்டு இருந்தோம்,கேட்டு
கொள்வான். வீட்டிற்கு செல்வான் மறுமாதம் தனது தந்தை டேய் வாடா தாத்தாவை பார்க்கனும் கொஞ்சநாள் கொட்ட வேண்டி இருக்கு என்று சொல்லும் போது பையன் சொல்லுவான் எந்த தாத்தா எந்த பாட்டி தமிழரை கொத்து கொத்தாக கொல்லும் போது கவிதை புனைந்தாரே அந்த தாத்தாவா அவருக்கு ஏனப்பா!! பல ஆயிரம் பேர் சாவும் போது கவலையில்லாத மனிதருக்கு சேவை செய்து பயன் என்ன எனக்கு மூனில் அஸ்ற்றோ சயின்ஸ்ஸில் இடம் கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் தாத்தாவிற்கு கொடுத்து வீணடிக்க வேண்டாம் என்று சொல்லுவான்,

வரும் நமக்கு இது கண்டிப்பாக வரும். ஒரு எறும்பு தனது உறவு இறந்த உடன் பல தூக்கி கொண்டு மவுன ஊர்வலம் செல்கிறது, ஒரு கரையான் வீடு இடிந்தவுடன் லட்சக்கணக்கான உறவுகள் இனைந்து வீட்டை கட்டுகிறது. நாமோ சாகாட்டும் தூக்கி போடுங்கப்பா, காயமடையட்டும் மருந்து போடுங்கப்பா, பட்டினியால் சாகின்றனர் சோறு போடுங்கப்பா , இப்படி எழுதினால் அவர்களுக்கு பயனுண்டாப்பா என்று கட்டளை இடும் .

சொந்தங்களே மரணித்த உடல்களை அடக்கம் செய்கிறோம், காயமுற்று கிடக்கும் எனது உறவுகளின் காயங்களை மருந்திட்டு ஆற்றுகிறோம், பசியால் வாடும் எனது சொந்தங்களுக்கு உணவு ஊட்டுகிறோம் என்று என்றாவது சொன்னதுண்டா? அதற்கு முயற்சியாவது எடுத்துண்டா, இப்படி யெல்லாம் நடக்கும் என்று சொல்லித்தான் வள்ளுவன் நினைக்கிறான் இவனுக்கு கற்பனை கதைகளை எழுதி வைத்தால் எப்படி நடக்கும் என்று யோசித்து யோசித்தே சொத்து போவான்,

அதனால் அவன் வீட்டில் அருகில் தினமும் வந்து போகும் காகத்தை உதாரணமாக வைத்து சொல்கிறான். அதும் அடிக்கடி சொன்னால் சலித்து போவான் என்று ஒரே ஒரு முறை சொல்கிறான். அவன் ஒரு முறை சொன்னாலும் ஒராயிரம் முறை சொன்னதற்கு சமம். இனிமேல் கவிதை எழுதுங்கள் கட்டுரை எழுதுங்கள் தகவல் சொல்லுங்கள் நமது தலைமுறையாவது ஒற்றுமையாய் வாழட்டும் இருக்கும் வரை நாமும் நமது சொந்தங்களுக்காக வாழ்வோம்.

காக்களைப்பொல் ஒரு பருக்கை கிடைத்தாலும் அதை பங்கிட்டு வாழ்வோம்

சூரியன் இன்று மறையலாம் ஆனால் நாளை மீண்டும் புதிய உற்சாகத்துடன் உதிக்கும், இது இயற்கை தத்துவம், தமிழினமும் அது போல் தான் இன்று பின்னடைவுதான் ஆனால் நாளை புதிய எழுச்சி உண்டு

No comments: