April 23, 2009

கண்ணோட்டம் மில்லவர் கண்ணிலர்.

கண்ணோட்டம் மில்லவர் கண்ணிலர்.
மும்பை,சித்திரை.10
வள்ளுவன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன பொண்ணெழுத்துக்கள்
" கண்ணோட்டம் மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இண்மையும் இல்"

இதற்கு விளக்கம் தேவையா தேவையில்லை இருப்பினும் நாமே இதை வேறுமாதிரி கூட எடுத்துக்கொள்ளக்கூடும். ஒன்றுமில்லை எளிதாக சொல்கிறார் தம்பி ஒரு செய்தியை நாம் சரியான கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை என்றால் நமக்கு கண் என்ற ஒரு உறுப்பு இருந்தும் கண் இல்லாதவர்களாவர் என்று சொல்கிறார். புறத்தை பார்க்க உதவும் கண்ணை மட்டும் வள்ளுவர் சொல்லவில்லை, நமது அகக்கண்ணையும் தான் சொல்கிறார். அகக்கண்ணைத்தான் இந்த இடத்தில் நாம் எடுத்து கொள்ளவேண்டும்.
ஷ்ரிய கோசல், கிரீஸ், ஸ்னேகல், கீர்த்தி, அபிலேஸ் இவர்கள் எல்லாம் யார் தெரியுமா, வட இந்தி மொழி செய்தி தொலைகாட்சிகளில் இலங்கை பற்றி செய்தியை சொல்லும் ஆய்வறிக்கை விடும் பரப்புறை ஆற்றும் நிருபர்கள் இளைஞர்கள் இளைஞிகள், செய்தி துறைக்கு அதிக அளவில் வந்துள்ளோம். சந்தோசம் தான் ஆனால் இவர்கள் சொல்வது என்ன. இந்திய செய்திகளை சரியாக சொல்லமுடிகிறதா, மக்களின் எத்தனை பிரச்சனைகளை இந்த செய்தி சேனல்கள் தீர்த்து இருக்கின்றன. மும்பை தாக்குதலில் கூட இவர்கள் நாங்கள் முதலில் காண்பித்தோம் என்று போட்டு கொண்ட சண்டை நடுநிலையாளர்களை வேதனைப்பட வைத்தது. சண்டை நடைபெறும் பகுதியில் காயமடைந்து வேனில் ஏற்றபட்டு கொண்டிருந்தர்களிடம் கூட வற்புறுத்தி மைக்கை நீட்டி நீங்கள் எப்படி தப்பித்தீர்கள் என்று மனிதாபிமானம் இல்லாமல் கேள்வி கேட்கும் நிருபர்கள் நிறைந்த இந்த கூட்டங்களை நாம் எப்படி தரமான செய்திஎன ஏற்று கொள்ள முடியும்.
சரியான கண்ணோட்டம் இல்லாமல் சிங்கள அரசு தரும் செய்திகளையும் தங்கள் கற்பனைகளில் தோன்றும் காட்சிகளையும், அனிமேசன் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் மரியாதைக்குறிய தலைவரை சம்பந்தமே இல்லாத செய்திகளில் இணைத்து செய்தி வெளியிடுவதுமாக இவர்களின் நிருபர் பணி சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் யாருக்காவது சிங்களத்தின் வரலாறு தெரியுமா என்றால் தெரியாது. தமிழர்களின் கலாச்சாரம் பற்றி தெரியுமா தெரியாது, இப்படி ஒன்று மே தெரியாமல் வாய்க்கு வந்த கற்பனை செய்திகளை சொல்கிறீர்களே என்று வி.ஒ.ஐ இடம் கேட்டேன். அதன் ஒரு நிருபரின் பதில் இந்தியர்களை பொருத்தவரை நாங்கள் விடுதலைபுலிகளை வில்லனாக நினைக்கிறோம். அதனால் தான் இப்படி செய்திகள் தரவேண்டி இருக்கிறது. அவர்களை பற்றி சாதகமாக நாங்கள் பேசினால் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும் அதனால் தான் நாங்கள் இப்படி செய்தி வெளியிட வேண்டி இருக்கிறது. இது என்ன கண்ணோட்டம் போராளிகளை இந்திய ஊடகங்கள் இப்படி கண்ட மாதிரி செய்திவெளியிட்டு இந்தியா வெங்கும் அவர்கள் வில்லன் போல சித்தரித்து வருகிறது.

ஒட்டு மொத்த தமிழர்களின் மனதை புண்படுத்தும் காரியம். உலகில் வேறு எந்த செய்தி நிறுவனங்கள் செய்யாத காரியங்களை இந்திய செய்தி நிறுவனங்கள் கற்பனை கலந்து ஒலிபரப்பி வருகிறது. கடந்த 10 நாட்களாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்த சொல்லி, ஆனால் இந்த செய்திகளை ஒரு டி.வி சேனலாவது , வட இந்திய பத்திரிக்கையாவது ஒலிபரப்பி இருக்கிறதா, ஏன் நம்மிடமே இருந்து கொண்டிருக்கு தமிழ் சேனல்கள் கூட இவர்களின் உண்ணாவிரத்தை இன்றுவரை ஒலிபரப்பவில்லை என்பது வருத்தமான செய்தி , கணிமொழி போய் சந்திததை என்னமோ அவர்தான் இந்த உண்ணாவிரதத்தை முன் எடுத்து நடத்துவது போல் செய்தி ஒலிபரப்பினார்கள். ஈழத்தமிழர் விடயம் என்பதற்காக நான் இவர்களை குறை சொல்லவில்லை. நொய்டா ஆருஷி கொலை வழக்கில் இந்த டி வி நிறுவனங்களுக்கு உச்சநீதி மன்றமே கண்டனம் தெரிவிக்கும் அளவில் அந்த தொலைக்காட்சி மீடியாக்கள நடந்து கொண்டது.
இவர்களுக்கு ஈழத்தில் நடக்கும் விடயங்களை கையாள்வதில் எந்த தடையும் இல்லை ஏன் என்றால் இவர்களை யாரும் கேட்கபோவது இல்லை. மனிதாபிமானமில்லாமல் தன் விருப்பம் போல் சிங்கள ராணுவத்தினர் தமிழகளை காக்க வந்த ரச்சகர்கள் போல் போராளிகளை தாலிபான்களை போல் சித்தரித்து செய்திகளை வெளியிடுகின்றனர். நாம் செய்யும் பெரிய தவறு நமக்குள்ளே செய்திகளை பரிமாறிகொண்டதால் இந்தியா முழுவதும் ஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகள் போய் சேரவில்லை. ஆனால் வருத்ததிற்கு உரிய விடயம் நமக்குள்ள அடித்து கொள்வது தான், ஒரு ஆட்சியர், ஒருபுறம் மேற்குடியினர் , ஒரு புறம் தமிழக அரசியல் பச்சோந்திகள் என நான்கு புறமும் இந்திய தமிழரகளின் ஈழத்து பார்வையை நசுக்க பார்க்கின்றனர். நம்மவர்களும் இவர்களின் நயவஞ்சக பேச்சில் விழுந்து ஜெய் ஜெய் கோசம் போடுகின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது உலகமே தமிழனத்தை கிள்ளைக்கீறு போல் நினைத்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மீடியாக்கள் தங்களுக்கு ஏற்றார்போல் கதைகளை அமைத்து ஒலிபரப்ப ஹீரோயீச போதையை ராமாயண மகாபாரத கதைகளின் மூலமாக உள்மனது வரை தினித்து விட்ட காரனத்தால் நல்லவற்றை கூட தவறாக பார்க்கும் மனப்பாண்மை வட இந்தியாவில் பெருகிவிட்டது. வள்ளுவனின் கூற்று போல் மீடியாக்களும் மாறி அவற்றை பார்ப்பவர்களையும் மாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

No comments: