April 29, 2009

அரம்பொருத பொன்போலத் தேயும்


அரம்பொருத பொன்போலத் தேயும்


முன்னோடியாக வளமுள்ள நாடு என்றாலும் உட்பகையுள்ள குடியானது,அறத்தினால் அறவாப்பட்ட உலோக்த்தைபோல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

"அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது

உட்பகை யுற்ற குடி"(888)

நாட்டின் உள்நாட்டில் நடக்கும் நிகழ்சிகளை பற்றி இவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

சிங்கள தேசம் நமது குழுமத்தில் சில நன்பர்கள் சிங்கள தேசத்தில் உள்ள அழகான மலை, வனம், நதி,பூக்கள் படங்கள் அனுப்புவார்கள். அந்த நாட்டின் அழகு உண்மையில் அற்புதமானவை, சில வருடங்களுக்கு கண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை பற்றி டாக்குமெண்டரி படம் ஒன்று பார்க்க நேர்ந்தது மனம் சில நேரங்களில் இந்த பகுதிகளில் ஏன் பிறக்கவில்லை என்று கூட நினைத்தது. அவ்வளவு அழகு அதுமட்டுமா மத்திய ஆசியாவின் சிங்கபூர் என்று கூட அது அழைக்கபட்டது.

அந்த நாட்டின் அரசு (ஆங்கிலத்தில் ஓவர் காண்பிடன்ஸ்) என்று சொல்லுவார்கள், திமிர்த்தனம் ஆம் அதுதான் அந்த நாட்டை ஆண்டவர்களிடம் மிஞ்சி இருந்தது. ஆரிய இனம் இந்தியாவில் எப்படி திராவிட இனத்தை அடக்கி ஆழ்கிறதோ அதை அங்கே நடத்த பார்த்தது. இந்தியாவில் பல பெரிய தலைவர்கள் தோன்றி திராவிட இனவிழிப்புணர்வு ஆரிய மாயைகளை எடுத்து சொன்னதும் அரசியலிலும் பங்கு பெற்று ஆட்சியாளார்களாக மாறிவிட்டதாலும், தங்களின் திராவிட அடக்கு முறை கொள்கைகளை முழுமையாக செய்ய முடியாமல் புளுங்கி கொண்டு இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் சிங்களன் ஆரம்பத்தில் இருந்தே திராவிட வளர்ச்சியை அடக்க முனைந்திருந்தான். இதன் காரணம் தான் சுதந்திரம் வாங்கியதும்

முடிந்தவரை தமிழர்களின் அதிகாரத்தை பறித்தான்.

என்று தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று சட்டம் இயற்றபட்டதோ அன்றே அந்த சிங்கள தேசத்தின் இறையான்மைக்கு சவப்பெட்டி தயாராகிவிட்டது. மெல்ல மெல்ல தனது கொடுமையை அரங்கேற்ற துவங்கி விட்டனர். விளைவு தமிழனம் சொல்லன்னா துயரை அடைய நேர்ந்தது. தனது மண்ணை விட்டு தனக்கு ஒவ்வாத சூழ்நிலை, காலநிலை போன்றவை நிறைந்த நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக பயணிக்க துவங்கிவிட்டது. இது சிங்களவனுக்கு மேலும் தொக்காகி போய் விட்டது. இதனால் முடிந்தவரை தமிழர்களை விரட்டுவதை முனைப்பாக செய்து வந்தான். இந்த நிலையில் இந்தியாவிலும் வாம்மா போம்மா வேலைகள் நடக்க ஆரம்பித்தது. அமைதிபடை என்ற பெயரில் இந்தியாவில் இருந்து சென்றும் சிங்களவனுடன் சேர்ந்து அவனுக்கு வேலையை எளித்தக்கி கொண்டனர்.

வெளியே இந்த வேலையேல்லாம் நடந்து கொண்டு இருந்தது. சுரண்டும் நாடுகள் இன்றோ நேற்றோ சிங்களம் படுத்துவிடும் ஏறிமேய வேண்டியது தான் என்ற நினைப்பில் கோடி கொடுத்து கொள்ளையடிக்க சீட்டு பிடித்ததார்கள். வள்ளுவன் சொன்னது போல் வெளியே அழகான சிங்கள தேசம் உள்ளே தேய ஆரம்பித்தது. ஒவ்வொரு வளர்ச்சியிலும் மிகுந்த சிரமப்பட வேண்டி இருந்தது. இடையில் பாதுகாப்பு செலவீனங்கள், செல்லரித்து போட வீட்டின் சட்டத்திற்கு சிங்கள மக்களை கலரடித்து பார்த்தார்கள் அரசியலார்கள் அதையும் நம்பினார்கள்.

எத்தனை நாள் தான் செலரித்த சட்டத்தில் கலர் அடிக்கமுடியும்,

தமிழர்கள் மீது வளர்த்த உட்பகையால் அந்த நாட்டின் வளர்ச்சி இன்று மரித்து கொண்டு இருக்கிறது. அதிக நாள் அல்ல இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அந்த நாட்டிற்கு கடன் வழங்கிய நாடுகளுக்கு மறைமுக அடிமையாக வேண்டிஇருக்கும், அப்போது தங்களது நாட்டின் தூதரகங்களுக்கு கூட வாடகை கொடுக்கமுடியாமல் கேவலபட வேண்டி இருக்கும்.

அன்று ஆட்சியாளர்கள் சொன்னதற்கெல்லாம் ஆமாம் சாமி போட்ட மக்களுக்கு தெரியவரும் அதைவிட உலகம் முழுவதும் உள்ள தமிழினம் சிங்களத்திற்கு எதிராக மாறிவிட்டது. இன்று இணைய தளங்களில் எழுத்துசண்டை வந்து விட்டது. இது நாளை தெருவிற்கு வரும் வேற்று நாடுகளில் வசித்தாலும் சிங்களவன் தனக்கு பகைவன், தமிழன் தனக்கு பகை என்று சண்டைக்கு நிற்பார்கள். இதுவே அதிக இப்படி அனைத்து வழிகளிலும் சிங்களம் சிறுக சிறுக தேய்ந்து வருகிறது.

வள்ளுவன் வாக்கு பொய்த்தாக வரலாறு இல்லை

No comments: