ஏழைகளின் ராணுவம்
சித்திரை, 11
ஏழைகளின் ராணுவம் என்றதும் ஒரு குறிப்பிட்ட மதபிரச்சாரமோ, அல்லது ஏழைகள் சேர்ந்து பாதுகாப்பிற்காக ஏதாவது குழு அமைத்து அதற்கு இந்த பெயர் வைத்தார்களோ என்பது இல்லை.
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு, ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு,
ருசியா, சீனா போன்றவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலில் வந்து கொண்டிருக்கும் ஒரு நாடு. உலகில் ஸ்திரமில்லாத அரசியல் அமைப்பையும், காலத்திற்கு ஒவ்வாத சட்ட அமைப்பையும் கொண்ட ஒரு நாடு.
இந்த நாட்டில் ராணுவம் தான் ஏழைகளின் ராணுவம். ஏழைகளின் ராணுவம் என்றால் ஏழை மக்களுக்காக பாடுபடும் ராணுவம் என்று பொருளல்ல. அப்படி எனில் ஏழைகளின் ராணுவம் என்றால் தனது பணியாளர்களில் ஏழைகளை மட்டும் கொண்டுருக்கும் ஒரு நாடு. ஆதாவது ரணுவ வீரர்களில் 99 சதவிதம் போர் ஏழைகள் மற்றும் அடிதட்டு குடும்பங்களில் இருந்து வந்தார்கள். மற்றும் நடுத்தர வர்க்க அதிகாரிகள்.
அதிர்ச்சியாக இருக்கிறதா இது உண்மை இதை ஒப்புகொள்கிறார் முன்னாள் ராணுவ அதிகாரி, இன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் திரிபால் சவுத்திரி முற்காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் தங்களிள் மீது போர் தொடுக்கும் அந்நிய படைகளை எதிர் கொள்ள தானே படையின் முன் வந்து கள மிரங்கி போராடுவார்கள் இதற்கு பல உதாரணங்கள் எடுத்துகாட்டாக அலக்ஸாண்டரை எதிர்த்து போரிட்ட புருஷோத்மன். ஆங்கிலேயரை எதிர்த்து நின்று களமாடிய பாளையக்கர வேந்தர்கள் , வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதர்கள் பல உதாரணமாக சொல்லாம். இந்திய 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 1950 வரை பல ராஜ்யங்கள்
ஐக்கிய பாரதத்துடன் இனைக்க பட்டது. இந்த நிலையில் முடியிழந்த பலமன்னர்கள் தங்களின் ராணுவ வீர்களை இந்திய ராணுவ படையுடன் இனைத்தனர். தாங்களும் ராணுவ படையில் உயரதிகாரிகளாக பணியாற்றினர். உதாரணத்திற்கு பட்டியாலா மன்னர் சுக்வீந்தர் சிங் ஜஸ்வால் இந்திய ராணுவத்தில் தனது
400 படைவீரர்களை இனைத்ததுடன் தானும் பிரிகேடியராக பணியாற்றினார்.
சீன போரில் இவரது வீரதீர சாகசங்கள் இன்றும் ராணுவத்தில் அதிகமாக பேசப்படும். இது 1960-கள் வரை தொடர்ந்தது அதன் பிறகு இந்திய அரசியல் வரலாற்றில் பல திருப்பங்கள் வர ஆரம்பித்தது. முன்னாள் குற்றவாளிகளை அரசியல் ஆதாயத்திற்கால சில அரசியல் வாதிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் நேரடியாக அரசியலில் குதிக்க ஆரம்பித்தனர்.
அரசியல் களத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்று உத்தரவாதம் கிடைத்தவுடன் தங்களை மக்களின் பிரதிநிதிகள் என்று காட்டி கொண்டனர். இவர்களின் அரசியல் பிரவேசம் ஜமீன் தார்கள், நிலச்சுவான் தார்கள் போன்றவர்களுக்கு தாங்களின் அதித சொத்துக்களை காப்பாற்ற அரசியல் பதவி ஒன்று இருந்தால் போதும் என்ற நிலை வந்தது. இதனை அடுத்து
நிலச்சுவான் தார்கள் ஜாமின் தார்கள் போன்றோர் அரசியல் களத்தில் தங்களின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக குதிக்க துவங்கினர்.
இந்தியாவில் தற்போது இருக்கும் பல அரசியல் குடும்பங்களை இதற்கு உதாரணமாக காட்ட முடியும். இதனால் பெரும்பணக்காரர்கள் தங்களின் குழந்தைகளை படிக்க வைத்து அயல் நாட்டிற்கு அனுப்பவும் அரசியலில் நுழையவும் , தங்களது அரசியல் பலத்தை கொண்டு நிலங்களை வளைத்து போட்டு வியாபாரம் செய்யவும், மற்றும் சேவை என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் கட்டவும், தொழிற்சாலைகளின் முதாலாளிகள்ஆக்கவும் விழைந்தனர். இன்று மராட்டிய மாநிலத்தில் உள்ள அனைத்து பெரிய தலைகள் எல்லாம் கல்வி நிறுவன தலைவர்கள், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள். எ.கா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி விலாஸ் ராவ் தேஷ் என பட்டியலிடலாம்.
தங்களது குற்றங்களை மறைப்பதற்காக சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக அரசியலுக்கு வருபவர்கள் வட இந்திய மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் தற்போதைய எம்.பி க்கள் வரை கூறலாம். பெரிய அரசியல் கட்சிகள் தங்களின் உறுப்பினர் பலத்தை கூட்டுவதற்காக இது போன்ற குற்றவாளிகளை அரசியலில் சேர்த்து கொண்டு இவர்களுக்கு சட்டத்தின் பிடியில் இருந்து அடைக்கலம் கொடுக்கிறது. தென் மாநிலங்களில் தனது திரைவாழ்வு அஸ்தமிக்கும் போது அரசியல் வாதி என்ற வேடம் போட்டு கொண்டு அரசியலில் புகுந்து திரைவாழ்வில் பெற்ற பிரபலத்தின் மூலமாக ஆட்சிக்கும் வந்து விடுகின்றனர்.
அதன் பிறகு தங்களின் வாரிசுகளை அரசியலில் வரவைத்து கொள்கின்றனர். 1960 வரை ராணுவத்தில் சேர்ந்த முன்னாள் குறுநில மன்னர்கள், ஜமீன் தார்கள், தங்களின் சொத்துக்களை காப்பாற்றவேண்டும் என்ற ஒரே நோக்கோடு அரசியலுக்கு வந்து அரசியலில் குற்றவாளிகளையும் இனைத்துவிடுகின்றனர். இவர்கள் தங்களது வாரிசுகளையும் அரசியலில் இறக்கிவிடுகின்றனர். இவர்களுக்கு அரசியல் சாசனமும் காலத்திற்கு ஒவ்வாத சில சட்ட திட்டங்கள் மூலமாக மெய்க்காப்பாளனாக இருக்கிறது.
1965-ற்கு பிறகு இந்தியா முழுவதும் மந்த மான சூழல் வர ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் அரசு வேலை என்பது தங்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பானது என்ற மாயை இந்தியா எங்கும் வர ஆரம்பித்து விட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டின் கல்வி அறிவு மிகவும் கீழ்மட்டத்தில் இருந்தது. அரசு பணிகளுக்கு படிப்பு என்ற எல்லைக்கோடு இருந்ததால் படித்தவர்கள் அரசு பதவியில் விரைந்து சேர ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் அதிகம் படிக்க வசதி இல்லாத ஏழைகுடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களின் குறைவான படிப்பை
கொண்டு அரசு பணிகளில் சேர வாய்ப்பில்லாதால் குறைவான கல்வியில் பணி தரும் ராணுவத்தில் சேர ஆரம்பித்தனர்.
இப்படி சேர்ந்தவர்களை தொடர்ந்து அவரை சார்ந்த பலரும் ராணுவத்தில் சேர ஆரம்பித்தனர். இப்படியாக 1995 வரை ராணுவத்தில் சேர்பவர்கள் அனைவரும் ஏழைகளாக இருந்துவிட்டனர். கல்வி கற்றவர்களில் உயர்கல்வி கற்க வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் அனைவரும் ராணுவத்தை நாட ஆரம்பித்து விட்டனர்.
இப்படியாக ஏழைகள் ராணுவ சிப்பாயாகவும் , நடுத்தர வர்க்கத்தினர் அதிகாரிகளாக சுமார் 30 வருடகாலமாய் உலகின் மிகப்பெரிய இந்திய ராணுவத்தை ஏழைகளின் ராணுவமாக மாற்றிவிட்டனர். 2000-ற்கு பிறகு இந்தியா முழுவதும் கணிபொறியுகம் தோன்றியது. கணிப்பொறி கல்வியினால் நல்ல
எதிர்காலம் உண்டு என்று அறிந்த தென் இந்திய இளைஞர்கள் அதிகமாக கணிப்பொறி கல்வியிலும், வட இந்திய இளைஞர் பொருளாதார கல்வியிலும் ஈடுபட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் யார் வேண்டுமானாலும் குறைந்த வாடகையில் இந்தியாவில் கடை போடலாம் என்று(திறந்தபொருளாதார) அரசின் திட்டத்தை அடுத்து பண்ணாண்டு கடைக்காரர்கள் இந்தியாவில் கண்ணில் பட்ட நகரங்களில் எல்லாம் கடைகளை(நிறுவனங்களை) திறக்க ஆரம்பித்தனர். இந்த நிறுவனங்களில் பணிபுரிய அதிக அளவில் இளைஞர்கள் சேர்க்க பட்டனர். தூண்டிலில் தானாக மாட்டும் மீன் போல் பல இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி எலும்பு துண்டுகளாக சம்பளம் கொடுத்து பல இளைஞர்களை தங்களது வலையில் இழுத்து போட்டது.
இதனால் பாதிப்பு முதலில் ராணுவத்திற்கு தான் ஆம் சுமார் 2700 உயரதிகாரிகள் பதவி தற்போது காலியாக உள்ளது. தற்போது ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வது மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலத்தில் எதற்காக வந்தார்களோ அது ஆம் வருமானம் தற்போது இந்தியாவில் இருக்கும் பல தனியார் செக்கியூரிட்டி நிறுவனங்கள் தரும் சம்பளம் கூட அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பல ராணுவ உயரதிகாரிகள் தங்களது பதவியை விட்டுவிட்டு பன்னாட்டு நிறுவனங்களில் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த பெட்ரோலிய நிறுவனத்தின் இந்திய கிளையில் பாதுகாப்பு ஆலோசகராக ஒரு முன்னாள் இந்திய ராணுவ உயரதிகாரி பணியாற்றி வருகிறார்.
அவருக்கு அந்த நிறுவனம் தரும் சம்பளம் மாதம் 1 லட்சத்திற்கு மேல் . இதற்கு மேலும் பல வசதி வாய்ப்புகள். இது முழுவதும் அவர் இந்திய ராணுவத்தில் இருக்கும் போதுகிடைத்தா என்றால் இல்லை என்று தான் சொல்லாம். ஆனால் அயல் நாடுகளில் நிலை வேறு உதாரனத்திற்கு அமேரிக்காவை எடுத்து கொள்ளாலாம் பல பெரிய நிறுவன பணியாளர்கள் தங்களது பணியை துறந்து விட்டு ராணுவத்தில் சேர்கின்றனர். ஏன் என்றால் அவர்களது திறமைகளுக்கு அவர்களின் ஆலோசனைகளுக்கு அந்த நாட்டு ராணுவம் மதிப்பளிக்கிறது.
இதன் காரணமாக பல புதிய யுக்திகள் நவீன ஆயுதங்கள் போன்றவை கண்டு பிடிக்க படுகிறது. அயல் நாட்டு ராணுவத்தில் அதிக அளவில் படித்தவர்கள் சேர்வதற்கு மேல் சொன்ன ஒரு காரணமே போதும். உதாரனம் இங்கிலாந்தின் இளைய இளவரசர் ராணுவத்தில் சேர்ந்து ஆபத்து நிறைந்த ஈரக்
சமர்களத்தில் பணியாற்றியதும், அமைதிப்படையுடன் இனைந்து ஸ்னேகலில் பிரிவினை வாதிகளுடன் போர்புரிந்ததும் இங்கே குறிப்பிடதக்கது.
முன்னாள் அமேரிக்க சனாதிபதி ஜான் கென்னடியின் மகன் அமேரிக்க விமான படை அதிகாரியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது ராணுவத்திலும் ஊழல்களை நுழைத்துவிட்டனர் அரசியல் வாதிகள் உதாரணத்திற்கு போர்பர்ஸ் ஒன்றே போது. இன்னும் சாதீய வேறுபாடுகள் இலைமறை காயாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய ராணுவத்தில் இருப்பதாக ஓய்வு பெற்ற பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது புதிதாக ஒரு பிரச்சனை தோன்றி இருக்கிறது. எல்லா இடங்களிலும் முட்டி மோதி தகுதி இல்லாதவர்கள் என்று சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு சென்றவகளின் புகழிடமாக ராணுவம் மாறிக்கொண்டு வருகிறது.
மெல்ல மெல்ல ஊழல், தகுதியில்லாதவர்கள், சாதீய பிரச்சனைகள், பாதியில் விட்டு செல்லும் அதிகாரிகள், சம்பள பிரச்சனை போன்றவைகளை இந்திய ராணுவம் கருத்தில் கொள்ளாமல் விட்டால் இன்னும் 30 வருடங்களுக்கு தற்போது இருக்கும் வலிமைகள் அனைத்தும் இந்திய ராணுவத்தின் வரலாற்று புத்தகங்களில் அமைந்து விடும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment