April 26, 2009

தமிழர்களின் நன்றிகள் என்றென்றும்







மும்பை,சித்திரை.13

மனசாட்சியற்ற மகிந்தா ராஜபக்சே அவர்களுக்கும், தன் கணவர் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் கல் மண் என்று நினைக்கும் மங்கையர்கரசி சோனியா ஜி அவர்களுக்கு, என்னமும் நடக்கட்டும் பணம் வரும் வழிமுக்கியம் என்று ஓட்டைவாளியில் பொருளாதார கிணற்றீல் இருந்து பணத்தண்ணீர் இறைக்கும் டர்பன் மாமா மான்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், ஆட்சி கட்டிலில் கடைசி பிராணவாயுவை சுவாசிக்கும் பிரணாப் முகர்சிக்கும் உலக தமிழர்களின் அதீத‌ நன்றிகள்,

ஆம் கடந்த 30 வருடங்களாய் நாங்கள் அதோ புலிகள் வென்றாகள், சிங்களனை அடித்தார்கள், இதோ புடித்தார்கள், என்று சந்தோசபட்டு கொண்டும் எங்கள் வேலைகளில் மூழ்கிகொண்டு இருந்தோம். ஈழதேசத்தில் புலிகள் இருக்கின்றார்களே நமக்கு ஏன் வம்பு நாம் பாட்டுக்கு நம்ம பொண்டு பிள்ளைகளை படிப்பித்து பணியில் அமர்த்துவோம், நமமட பிள்ளைகள் என்றாவது அப்ப நம்ம தேசம் எது என்று கேட்டால், மேப்பில் காட்டி இது தான் ஒருகாலத்தில் இருந்தது என்று நம்முடைய மலரும் நினைவுகளில் மீண்டிருந்த காலம் , அப்படியோ இருந்து விட்டோம்.

செங்சோலையில் நடந்த கொடுமைகள் கூட எங்கட சனங்களை பாதிக்கவில்லை, சிலர் கண்ணீர்விட்டனர். சிலர் துச்சோ, துச்சோ என்றனர். மகிந்தா நினைத்து கொண்டார், பரதேசம் போனவர்கள் பாராமுகமாகிவிட்டார்கள், இனி பருந்தாய் மாரி தமிழ் புறாக்களை வேட்டையாடலாம் என்று நினைத்து கொண்டார். உதவிக்கும் சோனியா மேடம் பாவம் அவர் ஹிந்தி படஙக்ள் அதிகம் பார்த்து பார்த்து பழிக்கு பழி, ரத்திற்கு ரத்தம் என்ற வசனம் அவருக்கு அதிகம் பிடித்து விட்டது. ஏற்கனவே டில்லியில் உயர் பதவியில் தமிழர்கள் ( தமிழ் இனவுள்ளவர்கள் இருப்பதை பிடிக்காமல்) அவர்களை எப்படி பழிவாங்குவது என்று பார்த்து கொண்டு இருந்த இரண்டு சேரலருக்கு இவர்களை பழிதீர்ப்பதாக நினைத்து ஈழத்தில் வாழும் உறவுகளில் உயிரை வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் அன்னைக்கு போதனை வழங்க , பிராண்வாயு பிரனாப்பும் வெளியுறவு என்றால் மக்களை கொல்லும் நாட்டுடன் நட்புறவு என்ற கொள்கை மட்டுமே என்ற நினைப்பில் தமிழர்களை கொல்ல ஆணையிட்டார்கள்.
ஆனால் புலத்தில் ஒரு தீர்க்க தரிசி தீர்மாணம் போட்டு விட்டார். இனிமேல் ஆயுதம் ஏந்த வேண்டாம், போராட்டம் என்னும் புதிய ஆயுதம் ஏந்துவோம், உலகம் எங்கும் நமது போராட்டத்தை விரிவடைய செய்வோம் என்ற போராட்டம், அதனால் தன்னை சாந்த படுத்தினார். கிளி வந்துச்சு ஆனைவந்துச்சி, புதுகுடியிருப்பு வந்துச்சு என்று அங்கயாலாய்த்தார்கள் சிங்களவனை விட டில்லி வாலாக்கள் தான் அதிகம் சந்தோசமடைந்தார்கள். ஆனால் உண்மை புலத்தில் அமைதியாகும் போராட்டம் உலகமெங்கும் விரிவடைந்துள்ளது. இதுவரை கொடிகண்டிராத சொகுசு வாழ்க்கை வாழ்ந்த எங்கட குட்டி பிள்ளைகள் கொடியேந்திவிட்டன. தாய் பத்தடி இனி குட்டி 16 அடி இதுவரை 10 அடி பாயும் தாயுடன் சண்டையிட்டாய் அதற்கே உனக்கு மூச்சு வாங்கிவிட்டது. இதோ குட்டிகள் கிளம்பிவிட்டன. குட்டி என்றால் சூ என்ற வுடன் ஓடிவிடும் என்று நினைக்கவேண்டாம்.

சிங்கள தேசத்தின் வரைபடத்தை மாற்றும் சூத்திரம் கொண்டவர்கள் நாங்கள் கிளம்பிவிட்டோம், மண்ணில் புதைந்தவன் எங்கே வருவான் என்ற பயத்தில் புதைகுழிக்களை கூட இடித்து பார்த்தாய் அல்லவா நீங்கள் ஈழத்தில் சில ஆயிரம் விதைகுழிகளை இடித்தீர்கள் ஆனால் அந்த விதைகுழியில் இருந்து கிளம்பிய புலிக்குட்டிகள் லட்சக்கணக்கில் உலகெங்கும், எங்களுக்கு விழிப்புனர்வூட்டிய மேற்சொன்ன பெரியவர்களுக்கு நன்றி

முக்கியமான ஒருவருக்கு நாங்கள் தமிழினன் உள்ளவரை நன்றி கூறுவோம் அவர் பயங்கொண்டார் கலைஞர் கருநா(க)நிதி (பயங்கொண்டார் என்ற புனைப்பெயர் புதிதாக இருக்கிறதா இல்லை கங்கை கொண்டான், கடாரம் வெண்றார் என்றதெல்லாம் எங்கள் தலைமுறையினர் அந்நியனை விரட்டி பெற்ற பெயர். ஆனால் தன் இனத்தை காட்டி கொடுத்து விட்டு இன்று ஓட்டு கேட்ட்க எப்படி வெளியில் வருவோம் செறுப்பு எறிவானா, அல்லது காறி உமிழ்வானா என்று பயந்து வீட்டில் இருந்த படியே உடன் பிரப்பே உன்னை கான எனக்கு ஆசைதான் ஆனால் செறுப்பு எறீவிழுமே என்ற பயன் எனக்கு ஆகையால் நீ எனக்கு ஓட்டு போடுவதை மறந்து விடாதே, மதுரைக்கு வருகிரேன். மக்கள் எல்லோரையும் கைகட்டும் டிரைனிங் கொடுக்க அழகிரிக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அனைவரும் கைகட்டிய பிறகு வருகிறேன். என்று பயந்து போய் அறிக்கை விடுவதால் இந்த பெயர் பயங்கொண்டார் சரியான பொருத்தம் தானே சரியான நேரத்தில் தனது குணத்தை வெளிப்படுத்த மூத்த தமிழன தலைவன். உன்னை இத்தனைவருடமாய் நம்பித்தானே நாங்கள் மோசம் போனோம் நாங்கள் தான் சீரழிந்தோம். எங்கள் ஈழமண்ணை உனது வாடை கூட பட விடாமல் காப்போம் இனி எங்கள் கரங்களில் தமீழம் நாங்கள் படைப்போம் தனித்தமிழீழம் , எங்களது அண்ணாக்களின் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்
இது சத்தியம், நிச்சயம்
வெல்க தமிழீழம், வாழ்க தமிழ் ,

No comments: