May 03, 2009

பகைவெல்லும் கூகையை காக்கை


இரவில் காகத்திற்கு கண் தெரியாது ஆனால் கூகை என்று கூறப்படும் ஆந்தைகளுக்கு இரவில் கண் தெளிவாக தெரியும் பகல் நேரத்தில் தன்னை விரட்டு காகத்தை ஆந்தை எளிதில் இரவில் தோற்கடித்து விடும் களமறிந்து போராடுக என்று ஆந்தையை உதாரணமாக வைத்து கூறுகிறார்.

பகைவெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் உயிர்க்கு(481)

தமிழ் தமிழர் என்று தனது வாழ்வின் கடைசிவரை கூறிகொண்டு இருந்த கலைஞர் அவரது கடைசி காலத்தில் தடம் பிரழ்ந்து விட்டார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாத்துறை போன்றோர்கள் மறைந்த பிறகு தமிழினத்தின் ஒரே காவலன் தான் தான் என அனைவரையும் நம்பவைத்தார். அவரின் பல நடவடிக்கைகள் அப்படித்தான் இருந்தது. இந்த நிலையில் அவரது கடைசி அத்தியாயம் துவங்கி விட்டது. தனது வாரிசுகளை அரசியல் களத்தில் இறக்கிவிட்டுவிட்டார்.

முன்பு எப்போழுதுமில்லாது கலைஞரின் வாரிசுகள் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஆளுமை காண்பித்தது. முன்பு ஆட்சியில் இருந்த ஒருவர் சுடுகாட்டு கொட்டகை அமைப்பதில் கூட ஊழல் செய்திருந்தார். ஆனால் அதையும் மிஞ்சி மதுரை மாநகராட்சி கழிப்பறை சுத்தம் செய்வதில் இருந்து குப்பைகள் அகற்றும் லோறிகள் வரை ஊழை பொய்விட்டது. மத்திய அரசின் இறுதி காலம் வரதுவங்கியது. கடந்த அக்டோபர் வரை ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாவலன் நான் தான் என்ற தோனியில் தந்தி, மனித சங்கில் , பந்த் ஆர்ப்பாட்டம் என்று நடாத்திவிட்டு , ஈழத்தமிழர்களை கடைசியில் நட்டாற்றில் விட்டு விட்டார். கலைஞரின் நடவடிக்கைகளை பார்த்தாலே நன்றாக புலப்பட்டுவிடும். புலிகள் புலத்தில் பலமாக இருக்கும் வரை கவிதை பாடியவர். திடீரென புலிகள் தீவிரவாதிகள் புலித்தலைவன் சர்வாதிகாரி என்று வசை பாட ஆரம்பித்து விட்டார்.

மெல்ல மெல்ல தன் நிலையை மாற்றிய அவர் இறுதியில் இந்தியாவே தான் தான் நேரிடையாக படை நடத்துகிறேன் என்று ஒப்புக்கொண்டும் அதற்கு நியாயம் கற்பிக்கும்,அளவிற்கு U டிரேன் அடித்துவிட்டார். அ.தி.மு.க கட்சிகாரர்கள் கூட தங்களின் தலைவி ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் என்று நினைத்து கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர் விவகாரத்தில் முழு முனைப்புடன் இறங்கிவிட்டார். இதை நாம் தேர்தல் ஸ்டேண்ட் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் சூழ்நிலையை நன்கு கவனித்தால் தெரியும் பொதுவாக ஜெயலலிதா வட இந்தியர்களை போல் சொன்ன சொல் தவறாதவர்.

தான் ஆட்சியில் வந்தால் கருணாநீதியை உள்ளே தள்ளுவேன் என்றார். அதே போல் இரவோடு இரவாக ஒரு கொலைகுற்றவாளியை போல் அள்ளிக்கொண்டு போய் உள்ளே தள்ளினார். அப்போது மத்திய அரசே ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்து நின்றது. இந்த நிலையில் ஈழவிவகாரம் தமிழகத்தில் சூடு பிடிப்பதையும் இதுவரை ஈழத்தமிழர்களின் பாதுகாவலன் என்று சொல்லிய கருணாநீதி தடம் பிரண்டதையும் தனக்கு சாதகமாக அமைத்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இது நாள் வரை ஈழத்தமிழர் விவகாரத்தில் அமைதிகாத்து வந்த ஜெயலலிதா திடிரென ஈழநாட்டு பிரகடணம் செய்ய ஆரம்பித்து ஆரம்பத்தில் அவரின் பேச்சுக்களை அரசியல் ஸ்டேண்ட் என தட்டிகழித்துவந்த கலைஞரும் காங்கிரஸ¤ம் நாட்கள் நெருங்க நெருங்க அவரது ஈழத்து பேச்சு தீவிரமாவதை கண்டதும் அதிர்ந்து போனார். மக்கள் அவர் பக்கம் ஒட்டு மொத்தமாக திரும்புவதை கண்ட கருணாநீதி கலங்கி போனார். 8000-ற்கும் மேற்பட்டோர் பலி, 17000- மேற்பட்டோர் படுகாயம் லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் பட்டினியால் தவிக்கிறது. வானமே கூரையாக ஓடும் நீரை குடித்துகொண்டு இழைதலைகளை உண்டு வாழ்கிறது.

தமிழகத்தில் மற்றும் உலகமெங்கும் 15 பேர் ஈழப்பிரச்சனைக்காக தீக்குளித்து மாய்கின்றனர். தமிழ் பெண்கள் 13 நாட்களாக பட்டினி கிடந்து போராடுகிறார்கள் அப்பொழுது எல்லாம் கண் தெரியாமல் காது கேளாமல் ஏதோ ஒரு கிரகத்தில் இருப்பது போல் இருந்த கலைஞர் அவர்கள் திடிரென அண்ணா நினைவகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இருந்ததும் இருந்தார் சிதம்பரம் சிங்கள அரசர்போல் போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று கூறினாராம் உடனே தனது உண்ணாநிலையை முடித்து கொண்டார்.

அதுவும் வெறும் 3 மணி நேரத்தில் , தனக்கு தானே என்ன செய்கிறோம் என்று புரியாமல் இந்த இவரது இந்த உண்ணாவிரத சம்பவம் தமிழக மக்களை இவர் மீது இரக்கபடுவதை விட கோபத்தை அதிகரிக்கவைத்துவிட்டது.. ஈழப்பிரச்சனையை இவரே மக்கள் மனதில் எளிதாக கொண்டு சென்றதை கவனத்தில் கொண்டு தான் சிங்கள தேசத்துடன் போர் தொடுத்து ஈழத்தை மீட்டு தருவேன் என்று அறிக்கை விட்டது. இதுவரை இந்தியாவில் மட்டுமே பிரபலமாகி இருந்த ஜெயலலிதா இன்று உலகம் முழுவதும் பிரபல மாகிவிட்டார். இதை தான் வள்ளுவர் சமயம் வாய்க்கும் போதெல்லாம் நான் ஈழத்து பாதுகாவலன், நான் தான் அவர்களின் விடிவெள்ளி என்று சொல்லி கொண்டு பகல் நேர காகம் போல சுற்றி கொண்டு வந்தார்.

ஆனால் இன்று அவரது அரசியல் சாம்ராஜ்ஜியம் இருண்டுவருவதை கண்டவுடன் ஜெயலலிதா தீவிரமாக களம் இறங்கிவிட்டார்.

தமிழன தலைவன் என்று களம் வந்த வேந்தனை சமயம் பார்த்து வீழ்த்த ஜெயலலிதா தயாராகிவிட்டார். தேர்தல் முடிவு வரைகாத்திருக்கலாம் என்று நினைக்கும் நபர்களுக்கு ஒரு பிரபலங்களின் சேர்கள் கோடிக்கணக்கில் சிங்கைக்கு கைமாறிக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்தே தேர்தல் முடிவு தெரிந்துவிட்டது.

No comments: