May 03, 2009

நாடாது நாட்டிலிற் கேடில்லை

ஆராயாமல் செய்த நட்பை பற்றி வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

நாடாது நாட்டிலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள்பவர்க்கு

நன்றாக ஆராயாமல் நட்பு செய்வதை விட கெடுதி ஏதும் இல்லை. ஆனால் அது போன்ற நட்பு பெற்றபிறகு அந்நட்பை கைவிடுதல் நட்பை விரும்புவோரால் முடிவதும் இயலாத காரியம் உண்மையில் அரசியல் களத்தில் இருப்போர் தங்களில் தருதலையான நட்பு காரனமாக மக்களிடம் மதிப்பின்றி போய்விடுவர் என்பதற்கு இந்த குற‌ளை போல் நல்ல எடுத்து காட்டு வேறு ஒன்றுமில்லை.

இந்திய அரசியலில் இன்றைய இந்த கீழ்மட்ட அரசியல் தனத்திற்கு நாம் தான் காரணம். மும்பையில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தும் தாக்குதல் பகுதியான தென் மும்பையில் வெறும் 36% ஓட்டு பதிவு தான் ஆகியிருக்கிறது. பொறுப்பானவர்கள் தங்களது கடமையில் இருந்து பிறழ்ந்து போகின்றனர். மீண்டும் தவறானவர்கள் கையில் ஆட்சி செல்கிறது. இந்த மக்களில் பொறுப்பற்ற குணத்தை அரசியல் வாதிகள் பொன்னான வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறனர். இன்றைய இந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கார்ட்டூன் வந்துள்ளது.

பொதுமகன்:- நீங்கள் செய்யும் அநியாயத்திற்காக நான் ஓட்டு போடமாட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு அரசியல் வாதி என்னும் பன்றியோ:- நீ ஓட்டு போடும் வரை நான் அநியாயம் செய்துகொண்டுதான் இருப்பேன் என்று சொல்வது போல் உள்ளது.

தான் தான் காங்கிரஸின் மூத்த தலைவர் அடுத்து தன்னைத்தான் காங்கிரஸின் தலைவராக நியமிப்பார்கள். காங்கிரஸின் தலைவரானால் அடுத்து தனக்கு பிரதமர் பதவிதான் என்று கனவு கண்ட சரத் பவார் திடிரென சோனியா காந்தி அந்த பதவிக்கு வந்த பிறகு இனி ராகுல், பிரியங்கா, அவரது மகன் என நூற்றாண்டுகள் ஆகும் இனிமேல் நமது பிரதமர் பதவி காங்கிரஸில் இருந்தால் கனவுதான் என்று நினைத்தார்.

பிரதமர் பதவி கனவை நினைவாக்க தனியாக ஒரு கட்சி ஆரம்ப்பித்தார். கட்சி ஆரம்பிக்க காரணம் சோனியா வெளிநாட்டவர் பாரம்பரிய கட்சியின் தலைவியாக இருப்பது தேசத்திற்கே இழுக்கு என்று கூறி வெளியேறினார். காங்கிரஸில் இருந்து வெளியே வந்தாலும் தேசிய வாத காங்கிரஸ் என்னும் பெயருடன் ஒன்றை ஆரம்பித்தார்.

அவரின் பிரதமர் கனவை நினைவாக்க காய்களை நகர்த்திபார்த்தார் எம்.எல். சீட் கூட கிடைப்பது அறிதாகிவிட்டது. விளைவு மீண்டும் காங்கிரஸில் போகலாம் என்றால் மானபிரச்சனை ஒரு கட்சியின் தலைவர் பதவியை அல்லவா அடகு வைக்க வேண்டும். தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து உடைந்து சைக்கிள் உருவானதே பிறகு அந்த சைக்கிளை அடகு வைத்துவிட்டு மீண்டும் கைகோர்க்க தமிழக காங்கிரஸ்காரர்களை போல் நல்லோர் உயிர்வாழ இருக்கவேண்டிய அனைத்து உணர்ச்சிகளையும் இழந்தவர்கள் அல்ல.

அதனால் சமாளித்து கொண்டு கூட்டனி என்ற பெயரில் காங்கிரஸ¤டன் நட்பு கொண்டார் ஆனாலும் தனது பிரதமர் கனவு கழுதையின் கழுத்தில் தொங்கும் காரட்டை போல் கடிக்க முயன்றும் முடியாதவராக இருந்தவர். இறுதியில் காங்கிரஸ¤டம் கூட்டனி மூன்றாவது அணிக்கும் ஆதரவு என்ற கூட்டனி தத்துவத்திற்கு புதிய விதி ஒன்றை எழுதி இருக்கிறார். இவரது இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் சரத் பவாரை விலக்கவும் முடியாமல் ஒட்டி கொள்ளவும் முடியாமல் விக்கித்து நிற்கிறது.

இந்திய அரசியல் பொருத்தவரை நேர்மை, நீதி, நியாயம், மக்களுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம், தூய்மை இவை எல்லாம் கயலான் கடையில் அடகுவைத்துவிட்டுதான் அரசியல் சாக்கடையில் குதிக்க வேண்டும் என்ற ஒரு நியதி.

No comments: