எழுகவே தமிழா எழுகவே
தன் இனக்குறுதி கண்ட போதும்
கொண்ட மௌனம் களைந்து எழுகவே,
இருண்டுகிடந்த ஈழத்தின் விடியல் கானஎழுகவே
ஊணும் இன்றி உறக்கம் இன்றி இன்னலுற்ற
ஈழதமிழரின் விழிநீர் துடைக்க எழுகவே
(எழுகவே)
நம்முள் இருந்து நஞ்சுகக்கும்
நாக்குகளை கிழித்தெறிய கழுகாய் மாறி
எழுகவேஇழந்த உரிமைமீட்க இல்லாமை போக்க
உலகத்தமிழினம் ஒன்று சேர்ந்து எழுகவே
(எழுகவே)
எழுதுகோல் என்னும் ஆயுதம் ஏந்திகளமிறங்கி
போரிட கலைஞர் அழைக்கிறார் டில்லி முழுதும்
நமது செய்தி என்னும் தந்தி சேர தயக்கமின்றி எழுகவே,
(எழுகவே)
ஒன்றுசேர்ந்த அரசியல் களம் கண்டோம்
ஈழத்தமிழருக்காக ஒன்று சேர்ந்த அரசியல் களம் கண்டோம்
சாதி, மத பேதம் மறந்து தமிழினத்தின் உயர்வை நினைத்து
கோடிஜோடி கரம் சேர்த்து எழுகவே,தயக்கமின்றி எழுகவே
(எழுகவே)
விழிமூடிய டெல்லி உனது தந்திகண்டு
மிரட்சியடந்தெழும்ப தந்தி என்னும்
செய்தி கொண்டு செங்கோல் நிமிர்த்த எழுகவே
எழுகவே தமிழா தன் இனக்குறுதி கண்ட போதும்
கொண்ட மௌனம் களைந்து எழுகவே
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எமக்கான தங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றிகள். இருண்டு கிடக்கும் எங்கள் நிலத்தில் ஒளித்திரி கொண்டு எழுந்துள்ள உங்களுக்கு எங்கள் இதயத்து நன்றிகள்.
சாந்தி
Post a Comment