August 08, 2008
வந்தது ஒலிம்பிக் திருவிழா.
வந்தது ஒலிம்பிக் திருவிழா.
இன்று கோலாகலமாக ஆரம்பித்தது உலக விளையாட்டு திருவிழா(ஒலிம்பிக்) உலகமே ஆர்வமுடன் நான்கு வருடமாக எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா.
சிட்னி ஒலிம்பிக் முடிந்த அன்றே அதிகமான திக் திக்கிற்கிடையில் 2008 ஒலிம்பிக் பீஜிங்கில் நடைபெறும் என்று அறிவித்ததுமே, அன்றைய தினமே சினா தனது நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வரும் அனைத்து பதக்கமுமே தனக்காகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது. முதலில் தனது சீனாவின் விளையாட்டு தொடர்புடைய அனைத்து நிறுவனம், பயிற்சி மையங்களில் திறைமையாளர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு பயிற்சி தர ஆரம்பித்து விட்டது. திறமையான விளையாட்டு விரர்களுக்கு தேவையான அனைத்து சாதனங்கள் மற்றும் பயிற்சிகளை அதற்காக ஆகும் செலவுகளுக்கான ஒரு ஆனையம் அமைத்து அதை முதலில் சுதந்திரமான ஒரு அமைப்பாக அமைத்து அதற்கான சுமார் 600 மில்லியன் டாலர் ஒதுக்கியது.
விளையாட்டு துறையில் எந்த ஒரு அமைப்போ அமைச்சகமோ தலையீடு இருத்தல் கூடாது என புதிய சட்டமே இயற்றி, திறமையான வீரர்களை உருவாக்க அனைத்து வழிகளையும் திறந்து விட்டது. இதில் முக்கியமான ஒன்று குழந்தைகளுக்கும் கடுமையான பயிற்சி தர அது விவாதமாகிபோனது. உலகறியும்.
மேலும் ஒலிம்பிற்கு வரும் அயல் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் வராதவாறு சுமார் 70 நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து கடந்த முன்று வருடமாக ஒரு குறைகூட சொல்லாத வாறு சிறப்பாக ஒலிம்பிக் பூங்கா அமைத்து, அதில் அனைத்து வசதிகளும் உருவாக்கி தந்தது.
மேலும் சினாவில் உள்ள அனைத்து பொழுது போக்கு தளங்கள் சீன விலையாட்டு வீரர்களுக்கு இலவச அனுமதி கொடுத்து அவர்கள் சீனா எங்கும் செல்வதற்கான செலவுத்தொகையை விளையாட்டு ஆனையமே ஏற்றுகொண்டது.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பறவை கூடு மைதானம் அமைத்து அதுவும் சுற்றுபுரசூழலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வாறு புதிய சீனாவை உலகிற்கு திறந்து வைத்தது.
ஆம் நேற்றுவரை சீனா ஒரு கம்பியூனிச நாடு உலக வர்தகத்திற்கு ஒவ்வாது நாடு என்ற ஒரு எண்ணத்தை மாற்ற வேண்டிய கட்டாயம், அதற்கு ஒலிம்பிக் ஒரு அருமையான வாய்ப்பு அதுவும் இலவச விளம்பரம் போல இந்த ஒலிம்பிக் சீனாவின் விளையாட்டு துறைமட்டுமல்ல சீனாவின் எதிர்கால பொருளாதர வளர்சிக்கும் மேலும் ஆசிய பிராந்தியத்தில் வலுவான ஒரு நாடாக உலகிற்கு காட்ட 2008 ஒலிம்பிகை சீனா பயன் படுத்தும்.
மேலும் தற்போது நடைபேற்று போருளாதார மாற்றங்களுக்கு போட்டி போடு விதமாக சினா வின் தயாரிப்புகளை உலக சந்தைக்கு எடுத்து சொல்ல இந்த ஒலிம்பிக் சரியான ஒரு பாதை வகுத்து தரும்.
மேலும் பல விடயங்களில் சீனாவின் பொருளாதாரத்தை சீர்தூக்கும் இந்த ஒலிம்பிற்கு சீனா தயரான விதம் சில வரிகளிலோ சில பக்கங்களிலோ எழுதிவிட முடியாது.
சமீபத்தில் தொலைகாட்சியில் தனது நாட்டு வீரர்களை சீனாவிற்கு அனுப்பிய கீரிஸ் நாடு தனது வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி மகிழ்ந்தது. ஆம் போருக்கு செல்லும் போர்வீரர்கள் போல் அனைத்து வீரர் வீரங்களைகளும் உடைகள் அனிந்து கீரீஸின் முக்கிய நகரமெங்கும் வலம் வந்த வீரர்களுக்கு கிரீசீண் நாகரமக்கள் அளித்த வரவேற்பு அவர்களின் மனதை உற்சாகமளித்த அந்த உற்சாகமே வீரர்களின் மனதில் ஒரு பெரிய உத்வேகத்தை அளித்து விட்டது. அந்த வீரர்களுக்கு நம் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்த நமது நாட்டிற்கு ஏதாவது ஒரு பதக்கம் வாங்கி கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு பாதி வெற்றியை பெற்று தந்து விடும்.
இந்தியாவின் நிலை என்ன என்று பார்க்கலாமா. இன்றுவரை எத்தனை வீரர்கள் எந்த எந்த பிரிவில் விளையாட செல்கிறார்கள் சீனா செல்கிறார்கள் என்ற பட்டியல் வெளியிடவில்லை. சின்ன துணுக்கு செய்தி போன்று 51 விளையாட்டு வீரர்கள் சீனா செல்கிறார்கள் என்று நேற்று வெளியானது. ஆனால் உண்மையில் இந்திய அரசு சார்பாக மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாததிற்கு முன்பே சீனாவில் முககமிட்டு விட்டார்கள். இவர்கள் என்ன விளையாட்டு வீரர்களின் பயிற்சி யாளர்களா?? சில பயிற்சியாளர்களுக்கு விமான டிக்கேடை நீங்களே போட்டு கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்ததால் வீரர்களை கணத்த மனதுடன் அனுப்பி வைத்தார்கள்.
உயரதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் சொக்காரர்கள் சொந்தக்காரர்கள் மற்றும் தூரத்து உறவினர்கள் கூட சீனாவை சுற்றிபார்க கிளம்பிவிட்டார் அதுவும் நமது வரிப்பணத்தில்.
மிகுந்த நம்பிக்கை வத்த மோனிகாதேவியை டோப்பிங் விவகாரத்தில் மாட்ட விட்டு அவரை பலிகடாவாக்கிவிட்டது. அதற்கு எந்த அமைப்பும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களுக்கு தெரியாமல் ஊக்கமருந்து கொடுக்கபட்டுள்ளது என்ற குற்றசாட்டும் விளையாட்டுதுறையில் வலம் வருகிறது. எது எப்படியோ சானியாமிர்சா என்னும் நட்சத்திர வீரங்கனையை சுத்தமாக விரட்டிய சக்தி இந்தியவீற்கு பதக்கம் வாங்கி தந்து பெயர் வாங்கிவிடுவாரோ என்ற நினைப்பில் மேனிகாவிற்கும் வேட்டு வைத்துவிட்டது.
ஆனால் இன்று உலகமே ஒலிம்பிக் திருவிழாவை வகைவகையாக ஆராய்ந்து மக்களுக்கு அறிவித்து கொண்டிருக்கும் போது இந்தியாமட்டும் சிரிலங்காவில் நடக்கும் டெஸ்ட்மேட்சை விலாவரியாக படம்பிடித்து கொண்டிருக்கிறது.
இந்த விடயத்திலும் திரு லாலு பிரசாத அவர்கள் பாராட்டுக்குறியவர்கள் ஆகிவிட்டார்.
ஆம் தனது இலாகாவான இரயில் வேயில் இருந்து பிஜிங் சென்ற 15 வீரகளுக்கும் முன்னனி பத்திரிக்கைகளின் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்தது.
ஆனால் பாவம் வருமானமோ????? இல்லாத விளையாட்டு துறையின் மக்கள் தொடர்பு அதிகாரிகளோ தங்கள் நாட்டு வீரர்கள் சீனா செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்ல கூட முடியவில்லை. என்ன செய்ய அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பே சீனா விஜயம் சென்றுவிட்டனர்.
எது எப்படியோ இயங்காமல் இருக்கும் விளையாட்டு துறைக்கு மூடுவிழா நடத்தி அதற்கு செலவழிக்கும் பணத்தை சரத்பவாரின் மாநிலமான மகராஸ்டிராவிவசாயிகளின் மறுவாழ்விற்கு பயன் படுத்தலாம் என்ன செய்ய விவசாயத்துறை அமைச்சரோ கிரிகேட்டில் மிகவும் பிஸியாக உள்ளார்.
முக்கியமான ஒன்று இந்த முறை பங்கேற்ற சென்ற பலவீரர்களின் சமீபத்திய விளையாட்டுகளின் தங்களின் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. ஒலிம்பிக்கில் என்ன செய்ய போகிறார்கள் என்றுதான் பார்க்கவேண்டும்.
காக்கை அமர பனம்பழம் விழும்கதையாகிபோகாமல் இருந்தால் சரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment