October 05, 2008

எழுகவே தமிழா எழுகவே

எழுகவே தமிழா எழுகவே
தன் இனக்குறுதி கண்ட போதும்
கொண்ட மௌனம் களைந்து எழுகவே,

இருண்டுகிடந்த ஈழத்தின் விடியல் கானஎழுகவே
ஊணும் இன்றி உறக்கம் இன்றி இன்னலுற்ற
ஈழ‌தமிழரின் விழிநீர் துடைக்க எழுகவே
(எழுகவே)
நம்முள் இருந்து நஞ்சுகக்கும்
நாக்குகளை கிழித்தெறிய கழுகாய் மாறி
எழுகவேஇழந்த உரிமைமீட்க இல்லாமை போக்க‌
உலகத்தமிழினம் ஒன்று சேர்ந்து எழுகவே
(எழுகவே)

எழுதுகோல் என்னும் ஆயுத‌ம் ஏந்திக‌ள‌மிற‌ங்கி
போரிட‌ க‌லைஞ‌ர் அழைக்கிறார் டில்லி முழுதும்
ந‌ம‌து செய்தி என்னும் த‌ந்தி சேர‌ த‌ய‌க்க‌மின்றி எழுக‌வே,
(எழுகவே)

ஒன்றுசேர்ந்த‌ அர‌சிய‌ல் க‌ள‌ம் க‌ண்டோம்
ஈழ‌த்த‌மிழ‌ருக்காக‌ ஒன்று சேர்ந்த‌ அர‌சிய‌ல் க‌ள‌ம் க‌ண்டோம்
சாதி, ம‌த‌ பேத‌ம் ம‌ற‌ந்து த‌மிழின‌த்தின் உய‌ர்வை நினைத்து
கோடிஜோடி க‌ர‌ம் சேர்த்து எழுக‌வே,த‌யக்க‌மின்றி எழுக‌வே
(எழுகவே)
விழிமூடிய டெல்லி உன‌து த‌ந்திக‌ண்டு
மிர‌ட்சிய‌ட‌ந்தெழும்ப‌ த‌ந்தி என்னும்
செய்தி கொண்டு செங்கோல் நிமிர்த்த‌ எழுக‌வே

எழுகவே தமிழா தன் இனக்குறுதி கண்ட போதும்
கொண்ட மௌனம் களைந்து எழுகவே

August 23, 2008

கனவை நினைவாக்கிய அலக்ஸ் செக்வாசர்














நடை




குழந்தையின் முதல் நடை
குறுநடை,
சிறுமியின் நடை சாரல்,
இளைஞியின் நடை தென்றல்,
வதனியின் நடை வசந்தம்,
காணிகையின் நடையோ காந்தாரம்,
மூதாட்டியின் நடையோ பழந்தமிழ்
நடந்தால் சுகர் தீரும்
வசதியுள்ளோர்க்கு,
நடைபோட்டால் தான் வயிறு நிறையும்
வறியோருக்கு,
நாளை நீ பார்க்க ,நாலுபேர் உனைபார்க்க
நட





இப்படி நடந்த ஒருவர் இன்று தங்கம் பெற்றார்.

நாமும் நடந்தால் நாம் உயர்வோம், நாம் உயர நாடு உயரும்.


அலக்ஸ் சேக்வாசர்


நடையில் தங்கம் சுமார் 14 வருட கனவு. கனவுகளுக்கு கால நேரமேது கனவு கானுங்கள். அதனுடன் முயற்சியும் செய்யுங்கள் காலம் வரும்
போது அது கைகூடும் அதற்கு எடுத்துக்காட்டு இந்த அலக்ஸ் சேக்வாசர்
26 டிசம்பர் 1984 ஆம் வருடம் பிறந்தவர். பள்ளிபருவத்திலே நடைபயிற்சி போட்டிகளின் பல பதக்கம் கண்டவர். ஆனால் உலக அரங்கம்
இவருக்கு அவ்வளவு எளிதில் தங்கம் தரவில்லை.





2005 இவர் தேசிய சாதனையை ஒரு வழியாக முறியடித்தார். ஆனால் சர்வதேச போட்டிகளில் இவரால் வெற்றி கொடி நாட்ட முடியவில்லை
2006 ஆண்டு இவருக்கு ஒரு சோதனையான வருடம் மொராக்கோவில் நடந்த ஒரு மராத்தான் ஓட்ட பந்தயத்தின் போது பாலைவன சூறாவளியால்
வழிதவறி சுமார் 15 நாட்களுக்கு பிறகு கண்டு பிடிக்க பட்டார்.

அப்பொழுது அவர் கூறியது நான் தற்கொலை செய்ய பார்த்தேன். ஆனால் எனது உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மெதுவாகிவிட்டதால் எனது மணிக்கட்டில் இருந்து இரத்தம் வழிய வில்லை.

அப்போழுது நான் நினைத்து கொண்டேன். மரணத்தின் வாயிலிருந்து என்னை காத்த இறைவன். என்னை சாதனையாளனாக பார்க்க விட்டு
வைத்தார் என்று நினைத்து கொண்டு இத்தாலி திரும்பியதும் தனது முன்னாள் தவறுகள் எல்லாம் என்ன வென்று நன்றாக ஆராய்ந்தார்.
பிறகு பீஜிங்கில் தங்கம் என்ற கனவுகளோடு நடக்க துவங்கினார்.
அவரது ஒவ்வொரு அடியும் பீஜிங் தங்க கனவாக இருந்தது. வாழ்க்கையின் எல்லைக்கு ஓடவில்லை ஆனால் 2008 ல் தங்கம் என்ற ஒரு
கனவில் நடந்தார்.


இதில் அவருக்கு ஒசாகா பந்தயம் ஒரு திருப்பமாக அமைந்தது. ஆம் அங்கு இவர் நன்றாக நடந்தும் மூன்றாம் இடம் தான் பெறமுடிந்தது.
இங்கு இவர் முதலிடம் வந்திருந்தால் "ஒருவேளை எனக்கு பீஜிங்கில் தங்கம் கிடைத்திருக்குமோ என்னவோ சந்தேகம் தான் என்றார்"
அங்கு தங்கம் வெண்றவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.
அவரிடமே பல அறிவுறைகள் வாங்கினார். ஆனால் காலத்தின் கோலம் இரண்டுபேருமே ஒரே நடை பந்தயத்தில் நடந்தார்கள். தனது இத்தனை
வருட கனவுகள் நினைவாக்க நடந்தார். 3:37:09 மனித்துளிகளின் 50 கிலோ மீட்டர் கடந்து சாதாரனமாக தங்கம் வாங்கவில்லை
ஆம் உலக சாதனை என்ற பெயருடன் தங்கம் வாங்கினார். தங்கம் வாங்கிய உடன் இவர் சொன்னது.

எனக்கு பல நேரங்களில் நடைஓட்ட பந்தயத்தில் என்ன என்ன தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிந்து விட்டது. நான் இத்தாலி சென்று எனக்கு ஏற்பட்ட இந்த பாடத்தை பிறருக்கு கற்று கொடுத்த வரும் காலங்களில் இத்தாலியை நடை ஓட்ட உலக சம்பியன்கள் வாழும் நாடாக மாற்றுவேன் என்றார்.

இதில் நமக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும் ஆம் ரோமாபுரிக்கு சுண்டல் விற்றவர்கள் அல்லவா நாங்கள் ??
(மசாலா பொருட்கள்)

August 22, 2008

ஷாஹாந்தோங் இளவரசி



ஷாஹாந்தோங் இளவரசி
லியூ ஸுன் ஹாங் ,
பெண்கள் என்றால் அடுப்பூதும் கை, மென்மையன கை டைப்படிக்கவும், கரண்டி பிடிக்கவும் தான் என்ற நிலை இந்தியாவில் மட்டுமல்ல
சீனத்திலும் ௨0 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக உண்டு ஆம், உலகிற்கு ஒரு மறைந்த கண்டமாக தனது நிலையை வெளியில் காட்டி
கொள்ள மறுக்கும் ஆமைபோல் சீனா இருந்த காலம். ஆண்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல மறைந்து பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.

தெற்கு சீனாவின் ஷாஹாந்தோங் மாஹானத்தின் யந்தாய் என்ற சிறு நகரத்தில் பிறந்தவர். இயற்கையிலேயே இங்கு மலை பள்ளாத்தக்கு
-களின் இடையில் தேயிலை விவசாயம் செய்து அதை மலைகள் கடந்து சமவெளிக்கு வந்து விற்று திரும்புவர் இது சுமார் 2000 ஆண்டுகளாக
நடந்து வரும் நிகழ்வு. ஆகையால் பாரம் சுமப்பதிலும் , பாரம் தூக்குவதிலும் இந்த பகுதி மக்களின் பரம்பரையாக வந்த சக்தி இன்று உலகை வெயிட் லிப்டிங்கில் தனது கவனத்தை ஈர்த்தது.

ஆம் இந்த நகரில் பிறந்த லியூ ஸுன் ஹாங் ஜனவரி மாதம் 1985 ஆம் ஆண்டு பிறந்த இவரது தந்தை வெயிட்லிப்டிங் பயிற்சியாளர்.
சகோதர்களும் வெயிட் லிப்ட் சேம்ப்யன்கள் தான் ஆனால் அவர்களுக்கு குடும்ப தொழிலான தேயிலை தோட்டத்தில் ஈடுபாடு அதிக மானதால்
அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வமில்லை. ஆனால் கொழு கொழு குழந்தையான லியூ ஸுன் ஹாங் யை வெயிட் லிப்ட்ராக மாற்றவேண்டும்
என்ற கனவு அவரது தந்தைக்கு இருந்தது.
விபரம் தெரிந்த பருவத்தில் இருந்தே தனது தந்தையுடன் இருந்த காலங்களில் வெயிட்லிப்டிங் மற்றும் அதன் நுணுக்கம் பற்றி அறிந்து கொண்ட லியூ ஸுன் ஹாங் தனது 9 வயதில் கையில் பௌடர் பூசி வெயிட் லிப்ட் தூக்க துவங்கினார். ஏற்கனவே கணம் தூக்குவது அவர்களது
பரம்பரை இரத்தில் இருந்து வந்ததால் பாரகம்பிகள் இவருக்கு கணமாக தெரியவில்லை.
1995 ஆண்டு தேசிய விளையாட்டு கழகத்தில் இணைந்தார். இவரது தந்தையின் மேற்பார்வையில் இவருக்கு பல சாதகமான போட்டிகளே
கிடைத்தன என்ற பேச்சு எழுந்தாலும் இவர் எந்த ஒரு போட்டியிலும் தோல்வி முகம் காட்டவில்லை. ஆரம்ப கிளப் போட்டிகள் ஆனாலும் சரி
தேசிய அளவிலான போட்டிகள் ஆனாலும் சரி இவர் கைகளில் வெயிட் பார் குழந்தையாக மாறிவிடும்.

" இதில் என்ன இருக்கிறது நான் பயிற்சி எடுக்கிறேன் பயிற்சியில் இதைவிட கொஞ்சம் அதிகமான பாரங்களை தூக்கி விளையாட்டிற்கான
சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு போட்டியின் விதிப்படி விளையாடுகிறேன். வெற்றிபெருகிறேன். முயற்சி செய்தால் அனைவருக்கும் பதக்கம்
உண்டு" இது விளையாட்டு இங்கு நடிப்பேல்லாம் எதற்கு" 2004 ஏதென்ஸில் தங்கம் வென்ற தங்க மகளாக சினாவிற்கு திரும்பும் போது
அவர் அளித்த பேட்டி"
நம்ம வீரர்களுக்கு சொல்வது போல் இல்லை " மைதானதிற்குள் நுழைவதற்குள் உடலை அப்படி ஆட்ட, இப்படி ஆட்ட, சூரியனை பார்த்து
நலம் விசாரிக்க, மட்டையினால் மைதானத்தை நோண்ட எதிரில் உள்ள வீரரை பார்த்து சைகை காண்பிக்க இரண்டு குதியாட்டம் போட
என இருந்து விட்டு பந்து வந்தது தெரியாமல் பேட்டை தூக்க பந்து ஸ்டேம்பை பதம் பார்த்த உடன் சில வினாடி அதிர்ச்சி அடைந்தது போல்
நின்று விட்டு வெளியேற"
அவர் சொன்னதில் எந்த ஒரு எதிர் விவாதாமும் சொல்ல தேவையில்லை"" ஆம் பண்ணாட்டு விளையாட்டரங்கில் இவர் நுழைந்ததுமே இவருக்கு கிடைத்த முதல் வெற்றியே தங்கம் தான்

சிங்கபூரில் நடந்த முதல் ஆசிய பெண்கள் சாம்பியன்சிப் போட்டி ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் தங்களது பெயர் வரும் போது சிறிது
நேரம் நிற்பர், பிறகு நன்றாக மூச்சு விடுவர், அதன் பிறகு ஒரு முறை வெயிட்டிங் பாரை பிடித்து பார்ப்பர். பிறகு போய் கைகளில் பௌடரை
பூசிக்கொண்டு வருவர் சில வினாடி கண்களை மூடி கடவுளாரை வேண்டுவர் ???? பிறகு மீண்டும் ஒரு முறை குணிந்து பாரை பிடித்து ஆட்டி
விட்டு , தம் கட்டி தூக்கி விட்டு சென்று விடுவர்.
ஆனால் லியூ ஸுன் ஹாங் கின் பாணியே தனி வருவார் வந்த வேகத்திலேயே வெயிட்டிங்லிப்டை தூக்குவார். வைத்துவிட்டு சென்று விடுவார்
சிங்கபூர் விளையாட்டு பத்திரிக்கை இவரது ஸ்டைலுக்கு இவரது பெயரையே வைத்து விட்டது. ஆம் ஸுன் ஹாங் ஸ்டைல் இது பலருக்கும்
வராத கைவந்த கலை. இதுவரை இவரது கைகளில் 40 க்கும் மேற்பட்ட கோல்டு, 23 வெள்ளி, 7 வெண்கலம், எல்லாவற்றையும் விட பண்ணாட்டு
போட்டிகளில் இவர் எந்த ஒரு விளையாட்டிலும் வெறும் கையுடன் திரும்பியது கிடையாது.
அதிகார பூர்வமாக இவர்க்கு பதக்கங்கள் அறிவித்த ஆண்டு 2004 ஆண்டு ஏதென்ஸ் ஒலிபிக் ஆம் அப்போழுதான் உலகத்திற்கே தெரிந்தது.
சீனர்கள் கூடைபந்து மட்டு மல்ல வெயிட் லிப்டிலும் மன்னர்கள் என்று
இவரது பண்ணாட்டு பதக்கம் ஒரு பார்வை
2003 ஆண்டு கனடாவில் வாண்குவரில் நடந்து உலக ஜூனியர் சம்பியன் சிப்பில் தங்கம்
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் தங்கம்
2005 74 உலக சாம்பியன்ஸிப் ஆன்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் தங்கம்
2006& 75 உலக சாம்பியன்ஸிப் ஆன்கள் மற்றும் பெண்கள்க்கான பிரிவில் வெள்ளி
2007 ராயல் உலக சாம்பியன்ஸிப் போட்டிகளில் தங்கம்
2008 39 ஆவது ஆசிய சாம்பியன் சிப் போட்டிகளில் தங்கம்
2008 பீஸிங் ஒலிம்பிகில் தங்கம் என பதக்கம் வாங்கி குவித்து விட்டார்.
2003 தனது 10 புதிய உலக சாதனைகள் புரிந்த லியூ ஸுன் ஹாங்
2008 ஒலிம்பிக்கில் தனது ஏதன்ஸ் சாதனையை தானே முறித்து உலகின் முதல் வெயிட் லிப் மங்கையாக வந்தார். இவரது சாதனைகள் இன்னும் மலர வாழ்த்துவோம்

August 21, 2008

கூட்டு விளையாட்டு அரங்கம்(சீனாவின் தேசிய விளையாட்டரங்க வரலாறு)






சிட்னி ஒலிம்பிக் நிறைவு நாள் பலத்த ஆரவாரத்துக்கிடையில் , திக் திக்குகளுக்கிடையில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் என்ற அறிவிப்பு. சீனாவையே பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீனாவின் மகிழ்சி இருந்தாலும் சீனாவிற்கு முன் ஒரு பெரும் கேள்வி எழுந்தது. ஆம் சீனாவின் எந்த ஒரு நிகழ்வும் உலகின் வரலாற்று பக்கங்களில் மேலே எழுதபட்டு விடும். ஆம் அது காப்பியானாலும் சரி, காப்பி குடிக்க பயன் படும் கோப்பை ஆனாலும் சரி , அந்த கோப்பை தயரிக்க பயன்படும் கண்ணாடி மண்( செராமிக்) ஆனாலும் சரி, பட்டு ஆனாலும் சரி, பட்டாசு, ஆனாலும் சரி , காகிதமானாலும் சரி எல்லாவற்றையும் விட இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகிற்கு புதிராய் விளங்கும் சீனத்து பொருஞ்சுவர் ஆனாலும் சரி. இப்படி உலக இதிகாசத்தில் நினைவிற்கு நிற்கும் வரலாற்று பதிவுகளை தந்த மூதாதையர்களை போல் சீனத்து ஒலிம்பிக்கும் உலக வரலாற்றில் பதிய வேண்டும் என்ற ஒரு ஆதங்கம் சீனாவிற்கு இருந்தது.

விளையாட்டு என்றால் நம் நினைவிற்கு வருவது மைதானங்கள் தான், அதன் பிறகுதான் மற்றவை முதலில் சீனா தனது நாட்டின் விளையாட்டு மைதானத்தின் தரங்களை பார்த்தது மேலை நாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு சொல்லிகொள்வது போல் எந்த மைதானமும் இல்லை.

முதல் கோணமே முக்கோணம் என்ற என்ற வெட்டி பேச்சில் கலங்கவில்லை. சீனா முதலில் ஒரு மைதானம் அமைக்க வேண்டும் அதுவும் உலகில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு மைதானம். இனிமேல் மைதானம் என்றால் சீனாவின் மைதானம் தான் உலக மக்களின் மனதில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திட்டம் உருவானது.

மைதானம் அமைப்பதற்காக சீனா ஒலிம்பிக் கமிட்டி ஆறு நபர் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. இதில் இருப்பவர்கள் எல்லோரும் சீனர்கள், மற்றும் உலகிற்கு பல அபார இஞ்சீனியரிங் சாதனைகளை படைத்து தந்தவர்கள். அதில் குறிபிடதக்க ஒருவர் லீஷு ஜிங் இவர் ஸாஹாங்காய் நகரின் கடற்கரை மெட்ரோ திட்டதை நிறைவேற்றி சீனாவின் பொருளாதார மாற்றத்திற்கு பெரும் துணையாக நின்றவர்.


இந்த குழு உலகெங்கும் பயணித்து மைதானங்களில் பல மாடல்களை கொண்டு வந்தது. கேலக்ஸி போல , ஆல்பா பீம் போல பல மாடல்கள் ஆனால் எதுவுமே குழுவினரின் ஒத்த கருத்தை பெறவில்லை . ஒருமுறை லீஷு ஜிங் தனது வீட்டு தோட்டத்தில் வேலை பார்த்து கொன்டிருந்த போது அங்கு இருந்த ஒரு குருவி கூடு ஒன்று அவரது கண்ணிற்கு பட்டது. முதலில் சாதாரணமாக விட்டுவிட்டவர் பிறகு அதை கூர்ந்து கவணிக்க துவங்கிவிட்டார். சில நாட்களில் அந்த கூட்டில் இருந்த மூன்று முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் அவர் கண்கானித்து வந்தார். நாட்களுக்கு பிறகு அவைகள் பறந்து சென்றது. அவர் அத்தனை நாட்கள் தனது நாட்குறிப்பில் குறிபிட்டு வந்தார். சுமார் 3 மணி நேரம் தாயை பிரிந்திருந்தும் குஞ்சுகள். அமைதியாக மகிழ்சியாக இருக்க காரணம் என்ன? என்று ஆராய்ந்தவருக்கு ஒரு உண்மை புலபட்டு விட்டது. ஆம் கூடு அந்த கூட்டின் அமைப்பு. அந்த கூட்டை அப்படியே தூக்கிகொண்டு குழுவினரிடம் காண்பித்து விளக்கினார்.
இதை உருவிற்கு கொண்டு வர சுவிஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பிரபல எஞ்சீனியர்கள் அழைக்கபட்டனர். ஹர்ஸோங் மற்றும் டெ மேஉரான். இவர்களின் திறமைக்கு சான்றாக நிற்பது லண்டனில் உள்ள பேங்சைடு பவர் ஸ்டேசன் ஒன்றே போதும்.


மேலும் இது போன்ற மாடலில் இதுவரை எந்த ஒரு மைதானமும் உலகில் இருந்ததில்லை. ஆனால் அதன் அமைப்பு முடியுமா என்ற கேள்வியை எழுப்பியது மட்டுமல்ல. முதலில் மாடல் செய்ய பட்டது. ஆம் முழுக்க முழுக்க மாடலை வைத்து செய்த உலகின் முதல் மைதானம். ஆம் நோ புளூ பிரிண்ட்.
2004 கில் வ‌டிவ‌மைப்பு ம‌ற்றும் க‌ட்டும் இட‌ம் உறுபெற்ற‌து. மேலும் அத‌ற்கான‌ அனும‌தி வ‌ழ‌ங்கிய‌து சீன அர‌சாங்க‌ம்.

கூட்டின் உறுதித்திற‌னுக்கு ம‌னித‌ மார்பு எலும்புக்கூட்டை எடுத்துகாட்டாக‌ வைத்தார்க‌ள். ஆம் வெளிப்ப‌குதியில் எந்த‌ ஒரு தாங்குக‌லும் இன்றி மார்பு எலும்பு போல் வ‌ளைந்து நிற்கும் ஒரு கூடு.
சுமார் 42000 ட‌ன் ஸ்டீல் அதை கார்ப‌ன் ம‌ற்றும் இரும்பின் சம‌க‌ல‌வை கொண்டு உல‌கின் முத‌ல் வ‌ளைவு த‌ன்மை கொண்ட‌ ஸ்டீல் பாள‌ங்க‌ள் த‌யாராகின‌ பீஜிங்கில் இருந்து 320 கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ள‌ ஷ‌ங்காய் ந‌க‌ரில்.

ஸீடீல் பற்றவைக்க சுமார் 500 பற்ற்வைப்பாளர்கள் தேர்வு செய்ய பட்டு 5 மாதம் பயிற்சி நடத்தபட்டது.ஜனவரி 2005 8 ஆம் திகதி அஸ்திவாரத்திற்கான முதல் ட்ரில் பூமியில் பதிக்க பட்டது. ஆரம்பத்தில் சுமார் 400 பணியாளர்களுடன் துவங்கிய பணி உறுதியான பீம்கள் பதிக்க பட்டதும் சீனாவின் கனவு மைதானமாக பேர்ட் நெஸ்ட் வடிவம் கொடுக்க பட்டது. ஆம் 2005 ஜூன் முதல் ஸ்டீல் சீனாவின் வாஸ்து வான புங் சூ வின் படி கிழக்கில் பதிக்க பட்டது. முதல் வெல்டரான பு குயின் " எனக்கு இந்த பணி மிகவும் மகிழ்சி யளிக்கிறது. கூட்டதில் மொத்தம் 200 பேர் இருந்தோம் குலுக்கல் முறையில் எனது பெயர் வந்தும். பற்றவைப்பு பணி யை ஆரம்பிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஸ்டீல் டென்னால‌ஜியில் ம‌ன்ன‌ரான‌ ஜே ப‌வுமேன். த‌லைமையில் ப‌ணி ம‌ள‌ ம‌ள‌வேன‌ ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌து. ஆம் சுமாம் 760 கிலோகிராம் எடை கொண்ட ஸ்டீல் பிளாக்குகள் ஒன்றன் மீது ஒன்று குறுக்கு நெடுக்கு என இணைத்து கொண்டு வந்தனர். குளிர் காலம் துவங்கும் முன்பு ஸ்டீல் இணைக்கும் பணி முடிய வேண்டும் என்பது அவர்களின் டார்கேட்.
மைகேல் குவிட் தலைமை ஆலோசகர். " ஸ்டீல் வெல்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான அது எளிதில் வெப்பத்தை கடத்தும் ஒரு பொருள் அதனால் பணியாளர்கள் வெப்பதினாலான பல நோய்களுக்கு ஆளானார்கள்.தேர்வு செய்யபட்டவர்களின் பாதி பேர் சொல்லாமல் கொள்ளாமல் பணி செய்து கோண்டிருக்கும் போதே ஓடிப்போனார்கள்."

செப்ட‌ம்ப‌ர் 2006 8 ஆம் திக‌தி ஸ்டீல் வெல்டிங் ப‌ணி முடிந்த‌து. அன்று சீனா முழுவ‌திலும் இருந்து ப‌ல‌ டீவீகார‌ர்க‌ள் வ‌ந்திருந்தார்க‌ள் ஆம் ஸ்டீல் ச‌ப்போர்ட் கொடுத்த‌ பிளாக்குகள் அன்று அகற்றபடும் தினம். ஒரு ஸ்டீல் பாளம் அரையின்ச் நகன்றாறும் மற்ற பாளங்களின் கணத்தால் ஒட்டு மொத்த ஸ்டீல் கூடமே தரையில் விழும் சூழல் பி டீவீ நிறுபர் ஒருவர் சென்னது இந்த ஸ்டீல் கூடு சாய்ந்தால் சீனாவின் மானமே சாய்ந்து விடும் என்றார்.


ஆனால் எங்களது கனவு நிறைவேறியது அத்துனை பிளாக்குகள் அகற்றபட்டும் பீம்களின் தாங்குதல்களின் பெருமையுடன் நின்றது. அதை பார்க்க வந்திருந்த ஆயிரக்கனக்கான சீன மற்றும் பிறநாட்டு மக்கள் கைதட்டி ஆரவாரமிட்டனர்.

அதன் பிறகு உள்வேலைகள் ஆரம்பமானது. இருக்கைகள் எல்லாம் கூட்டின் உள் தன்மை எவ்வளவு மெல்லியதான இருக்க வேண்டுமோ அதை மனதில் கொண்டு உறுவானது. ஆம் விரிப்புகள் கூட பட்டு நூலின் கழிவுகள் பயன்படுத்த பட்டது.வெறும் காலை நடந்து செல்வோர்கள் அதை உணர்வர். அதன் மேற்கூறை மெல்லிய செயர்க்கை கடற்பஞ்சின் தகடுகளால் மேயபட்டது.

ஆம் ஒலிம்பிக் ஆரம்பிக்கும் நேரம் சீனாவில் வெதுவெதுப்பான கால நிலை அதை கணக்கில் கொண்டும் எந்த நேரமும் அந்த சூழழுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மையுடைய க்டற்பஞ்சின் மாதிரியை கருத்தில் கொண்டு தகடாக வேய்ந்தார்கள் இதுவும் உலக வரலாற்றில் முதல் முறை.

2007 குளிர் கால‌த்தில் ம‌க்க‌ளின் பார்வைக்காக‌ திற‌க்க‌ ப‌ட்ட‌து. ம‌க்க‌ள் வெள்ள‌ம், பெருந்திர‌ளாக‌ திர‌ண்ட‌து. ஆம் எங்கும் விரிந்த‌ கண்க‌ள் அவ‌ர்க‌ளிட‌ம் பேசுவ‌த‌ற்கு வார்த்தையே இல்லை.
பி பி சி யின் மைகேல் அல்பின் சொன்ன‌து. சீனா 2000 வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கும் மேலும் ஒரு உல‌க‌ அதிச‌ய‌த்தை உல‌கிற்கு த‌ந்த‌து என்றார்.

சுமார் 91000 ஆயிர‌ம் ந‌ப‌ர்க‌ள் அம‌ர்ந்து பார்க்க‌லாம் இந்த‌ ஸ்டேடிய‌ம் 300மீட்ட‌ர் உய‌ர‌மும்
220மீட்டர் அகலமும்69.2 மீட்ட்ர் நீளமும் கொண்டது 258 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் சுமார் 423 மில்லியன் அமேரிக்கன் டாலர் செலவில் நிற்கும் இந்த பறவை கூட்டு மைதானத்தில் தான் 8.8.2008 அன்று உலகையே வியக்க வைத்த ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்சிகள் நடைபெற்றது.


பணியாளர்கள் அத்துனைபேர் பெயரும் ஸ்ட்டீல் தூண்களின் எழுதபெற்றுள்ளது. வரும் காலங்களில் தலைமுறைகள் தெரிந்து கொள்வதற்காக
லி சூ கிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து இதில் முக்கியமானவர்கள் ஹர்ஸோங் மற்றும் டெ மேஉரான்.
ஜொக்ஸ் பைன், ஜே பௌமேன், மைகேல் குவாக்ஸ், சஸ்டீவ் மவ் வாங், கிம் , லை ஜூஹுன் மற்றும் ப்ஹு குலில்

August 15, 2008

ஷங் ஃப்யீ (அமேரிக்காவை விர‌ட்டிய‌ குட்டி டிராக‌ன்)




ஷங் ஃப்யீ (அமேரிக்காவை விர‌ட்டிய‌ குட்டி டிராக‌ன்)


சீனத்து ஜிம்னாஸ்டிக் இராணி
இவரது தந்தை ஒரு தனியார் நிறுவன வங்கி அதிகாரி, தாயார் வீட்டை கவணிக்கும் பணி சாதாரன் குடும்பம் தான், இரண்டு குழந்தைகளின் மூன்றாவதாக பிறந்தவர். அண்ணன் மார்கள் அனைவரும் படிப்பில் சுட்டி இவருக்கு மட்டும் விளையாட்டில் ஆர்வம்,

இந்திய குடும்பங்களை போல் படிடா படிடீ என்று அதட்டவில்லை, அவளின் விளையாட்டு ஆர்வத்தை வளர்த்தார்கள் அவர்களது பெற்றோர்கள். ஆனால் என்ன விளையாட்டை தேர்தெடுக்க என எண்ணியபோது ஷங் ஃப்யிக்கு ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் காட்ட அதையே அவர்களது பெற்றோர் அவளுக்கு பயிற்சி யளிக்க ஏற்பாடு செய்தனர்.
மே மாதம் 28 ஆம் திகதி 1988 ஆண்டு பிறந்த குழந்தை தனது 4 வயதிலேயே வளையங்களை பிடித்து விளையாட துவங்கியது. த‌ரைஉட‌ற்ப‌யிற்சி ம‌ற்றும் வாலேட்டிலும் மிக‌விரைவிலேயே திற‌மை பெற்ற‌ சாங் த‌ன்னுடைய‌ 6 வ‌து வ‌ய‌தில் ஹூய்பே டீமில் இட‌ம்பெற்றார். உல‌கிலேயே இவ்வ‌ள‌வு குறைந்த‌வ‌ய‌தில் ஒரு டீமில் விளையாட(பயிர்சிகாக அல்ல) தேர்வு செய்யப‌ட்ட‌தும் ஒரு உல‌க‌ சாத‌னைதான்.

பேல‌ன்ஸ் பீமில் ம‌ட்டும் கொஞ்ச‌ம் த‌ய்க்க‌ம் காட்டும் ஷாங் பெங் சொன்ன‌து" என‌க்கு பேல‌ன்ஸ் பீமை பார்த்தாலே ஏதோ ம‌ன‌தில் தோன்றுகிற‌து அத‌னால் என‌க்கு அதில் முழும‌ன‌தாக‌ விளையாட‌ முடிவ‌தில்லை நான் தேசிய‌ டீமில் சேர்வ‌த‌ற்கு வைத்த‌ போட்டியின் போது இர‌ண்டு வாய்ப்பு த‌ந்தும் இர‌ண்டும் முறையும் ச‌றுக்கிவிழுந்து விட்டேன்.
அந்த‌ தேர்வின் போது என‌து அப்பா த‌ன‌து விடியோ கோமிராவில் அதை ப‌ட‌மாக்கி கொண்டிருந்தார். இர‌ண்டு முறை த‌வ‌றிய‌போது ந‌டுவ‌ர்க‌ள் முக‌ம் கோன‌லான‌ போது என‌க்கு ந‌ம்பிக்கை அற்று போன‌து. தேசிய‌ சாம்பிய‌னாக‌ நாம் தேர்வு செய்ய‌ மாட்டோம் என்று தான் நினைத்தேன்.



ஆனால் என‌க்காக‌ சிறிது இடைவெளிவிட்டு இன்னும் ஒரு த‌ட‌வை பீம் பேல‌ன்ஸுக்கு வாய்ப்பு த‌ருகிறோம் என்றார்க‌ள். உட‌னே என‌து த‌ந்தையிட‌ம் சென்று அவ‌ரின் விடியோ கேமிராவில் ப‌திவான‌ என‌து விளையாட்டில் உள்ள‌ த‌வ‌றுக‌ளை பார்த்து கொண்டேன். முக்கிய‌மாக‌ நான் முத‌லில் பீமில் ஏறிய‌ உட‌னே என‌து கால்க‌ள் வ‌ல‌புர‌மாக‌ அதிக‌ ஓர‌ம் வில‌கி செல்வ‌தை க‌வ‌ன‌த்தில் கொண்ட‌போது இர‌ண்டு முறையும் அந்த‌ த‌வ‌று தான் ப‌திவாகிது.

சிறிது நேர‌தில் என‌க்கான‌ அழைப்பு வந்தது என் அப்பா என்னை க‌ட்டிய‌ணைத்து முத்த‌மிட்டார்க‌ள். அப்போழுது அவ‌ர்க‌ள் சொன்ன‌ வார்த்தை நீ ந‌ம‌து சீனாவிற்கு ஒரு வ‌ர‌ம் என்றார்க‌ள்.

உள்ள‌த்தில் பேல‌ன்ஸ் பீமை ப‌ற்றீய‌ ப‌ய‌ம் எங்கு போன‌தென்றே தெரிய‌வில்லை. மூன்றே நிமிட‌த்தில் என‌து விளையாட்டை முடித்துவிட்டு ந‌டுவ‌ரின் ப‌திலுக்கு கூட‌ காத்திராம‌ல் என‌து அப்பாவிட‌ம் சென்று எப்ப‌டி அப்பா என்றேன்"

அந்த‌ இர‌வு என‌க்கு எந்த‌ ஒரு ப‌த‌ட்ட‌மும் இல்லாம‌ல் க‌ழிந்த‌து ஆனால் என‌து அப்பா ஜெப‌ம் செய்து கொண்டே இருந்தார்க‌ள். நான் காலையில் என‌து அப்பாவிட‌ம் சொன்ன‌து" நான் ந‌ல்லாதான் விளையாண்டேன் என‌து பெய‌ர் தேசிய‌ அணியில் இட‌ம் பெற்றுவிடும் ஏன் இப்ப‌டி டென்ஸ‌ன் ஆகிறீர்க‌ள்"
ஆம் அதே போல் அனைத்து பிறிவிலும் முத‌லிட‌ம் வ‌ந்து என‌து பெய‌ர் ப‌ல‌கை போர்டில் அறிவிக்க‌ ப‌ட்டிருந்த‌து.
அத‌ன் பிற‌கு ஷாங் கின் ப‌த‌க்க‌ ப‌ட்டிய‌லுக்கு ஒரு புத்த‌க‌மே போட‌வேண்டி இருந்த‌து. அவ‌ர்க‌ளின் த‌ந்தைக்கு.


2005 ஆம் ஆண்டு மெல்போர்னில் வ‌லுட் சாம்பிய‌னாக‌ வ‌ந்தார். அத‌ன் பிற‌கு த‌ன்னுடைய‌ 7 வ‌ய‌தில் த‌ங்க‌ம் பார்த்த‌ ஷாங் அத‌ன் பிற‌கு வெங்க‌ல‌மோ அல்ல‌து வெள்ளியோ அவ‌ர‌து க‌ண்க‌ளுக்கு ப‌ட‌வே இல்லை.

2004 ஆம் அண்டு ஏதென்ஸில் ந‌ட‌ந்த‌ ஒலிம்பிக்கின் போது இவ‌ருக்கு அமேரிக்காவை சேர்ந்த‌ ஜிம்னாஸ்டிக் ப‌யிற்சி யாள‌ர். சீனாவில் ஜிம்னாஸ்டிக்கில் உள்ள‌ குறைக‌ளை எல்லாம் சொல்லி சீனா ஜிம்னாஸ்டிகில் முத‌லிட‌ம் வ‌ருவ‌து சிர‌ம‌ம் என்றார். அப்போழுது அமேரிக்காதான் உல‌க‌ சாம்பிய‌ன் ஜிம்னாஸ்டிக்கில். இந்த‌ வார்த்தையை ம‌ன‌தில் கொண்டார். த‌ன‌து த‌ந்தை சொன்ன‌ சீனாவின் வ‌ர‌ம் நான், நான் கொண்டு வ‌ருவேன் சீனாவை உல‌கின் சாம்பிய‌னாக‌ என‌ சாவால் விட்டு த‌ன‌து நாட்டிலேயே ந‌ட‌க்க‌ விருக்கும் ஒலிம்பிக்காக‌ காத்திருந்தார்.

வ‌ந்த‌து அந்த‌ நாளும் அமேரிக்க‌ க‌ழுகுக‌ள் சீனாவில் வ‌ட்ட‌ மிட‌ சீன‌த்து குட்டி டிராக‌ன் த‌ன‌து ஆக்ரோச‌த்தை மிக‌ மென்மையாக‌ காட்டிய‌து

Position Country Vault Uneven Bars Balance Beam Floor Total
1 China 61.825 62.650 63.050 60.750 248.275
2 United States 62.225 61.125 63.400 60.050 246.800
3 Russia 60.850 61.775 62.000 59.775 244.400
4 Romania 59.725 58.450 60.950 59.300 238.425
5 Australia 59.450 59.050 58.625 58.325 235.450
6 France 58.825 58.525 58.975 57.550 233.875
7 Brazil 59.450 58.425 56.675 59.250 233.800
8 Japan 58.050 58.725 59.900 56.500 233.175


Final Rank Country Vault Uneven Bars Balance Beam Floor Total
China 46.350 (2) 49.625 (1) 47.125 (2) 45.800 (1) 188.900
Yang Yilin 15.100 16.800
Cheng Fei 16.000 15.150 15.450
Jiang Yuyuan 15.975 15.200
Deng Linlin 15.250 15.925 15.150
He Kexin 16.850
Li Shanshan 16.050
United States 46.875 (1) 47.975 (2) 47.250 (1) 44.425 (3) 186.525
Shawn Johnson 16.000 15.350 16.175 15.100
Nastia Liukin 16.900 15.975 15.200
Chellsie Memmel 15.725
Samantha Peszek
Alicia Sacramone 15.675 15.100 14.125
Bridget Sloan



வெறும் இர‌ண்டு புள்ளியில் அமேரிக்க‌ க‌ழுகுக‌ளை சின‌த்து டிராக‌ன் தூக்கி எறிந்து கால‌ங்கால‌மாய் நான் தான் சாம்பிய‌ன் என்ற‌ அமேரிக்காவின் ம‌ம‌தையை ப‌ந்த‌டிவிட்ட‌து.
த‌னது நான்கு வ‌ருட‌ க‌ன‌வை நினைவாக்கிய‌ கையோடு உல‌கிற்கு ஒரு ந‌ல்ல‌ பாட‌மாய் விள‌ங்கிய‌ ஷ‌ங் ஃப்யீ வை நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்




August 08, 2008

வந்தது ஒலிம்பிக் திருவிழா.







வந்தது ஒலிம்பிக் திருவிழா.

இன்று கோலாகலமாக ஆரம்பித்தது உலக விளையாட்டு திருவிழா(ஒலிம்பிக்) உலகமே ஆர்வமுடன் நான்கு வருடமாக எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா.

சிட்னி ஒலிம்பிக் முடிந்த அன்றே அதிகமான திக் திக்கிற்கிடையில் 2008 ஒலிம்பிக் பீஜிங்கில் நடைபெறும் என்று அறிவித்ததுமே, அன்றைய தினமே சினா தன‌து நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வரும் அனைத்து பதக்கமுமே தனக்காகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது. முதலில் தனது சீனாவின் விளையாட்டு தொடர்புடைய அனைத்து நிறுவனம், பயிற்சி மையங்களில் திறைமையாளர்களை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு பயிற்சி தர ஆரம்பித்து விட்டது. திறமையான விளையாட்டு விரர்களுக்கு தேவையான அனைத்து சாதனங்கள் மற்றும் பயிற்சிகளை அதற்காக ஆகும் செலவுகளுக்கான ஒரு ஆனையம் அமைத்து அதை முதலில் சுதந்திரமான ஒரு அமைப்பாக அமைத்து அதற்கான சுமார் 600 மில்லியன் டாலர் ஒதுக்கியது.


விளையாட்டு துறையில் எந்த ஒரு அமைப்போ அமைச்சகமோ தலையீடு இருத்தல் கூடாது என புதிய சட்டமே இயற்றி, திறமையான வீரர்களை உருவாக்க அனைத்து வழிகளையும் திறந்து விட்டது. இதில் முக்கியமான ஒன்று குழந்தைகளுக்கும் கடுமையான பயிற்சி தர அது விவாதமாகிபோனது. உலகறியும்.

மேலும் ஒலிம்பிற்கு வரும் அயல் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் வராதவாறு சுமார் 70 நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து கடந்த முன்று வருடமாக ஒரு குறைகூட சொல்லாத வாறு சிறப்பாக ஒலிம்பிக் பூங்கா அமைத்து, அதில் அனைத்து வசதிகளும் உருவாக்கி தந்தது.
மேலும் சினாவில் உள்ள அனைத்து பொழுது போக்கு தளங்கள் சீன விலையாட்டு வீரர்களுக்கு இலவச அனுமதி கொடுத்து அவர்கள் சீனா எங்கும் செல்வதற்கான செலவுத்தொகையை விளையாட்டு ஆனையமே ஏற்றுகொண்டது.

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பறவை கூடு மைதானம் அமைத்து அதுவும் சுற்றுபுரசூழலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வாறு புதிய சீனாவை உலகிற்கு திறந்து வைத்தது.
ஆம் நேற்றுவரை சீனா ஒரு கம்பியூனிச நாடு உலக வர்தகத்திற்கு ஒவ்வாது நாடு என்ற ஒரு எண்ணத்தை மாற்ற வேண்டிய கட்டாயம், அதற்கு ஒலிம்பிக் ஒரு அருமையான வாய்ப்பு அதுவும் இலவச விளம்பரம் போல இந்த ஒலிம்பிக் சீனாவின் விளையாட்டு துறைமட்டுமல்ல சீனாவின் எதிர்கால பொருளாதர வளர்சிக்கும் மேலும் ஆசிய பிராந்தியத்தில் வலுவான ஒரு நாடாக உலகிற்கு காட்ட 2008 ஒலிம்பிகை சீனா பயன் படுத்தும்.

மேலும் தற்போது நடைபேற்று போருளாதார மாற்றங்களுக்கு போட்டி போடு விதமாக சினா வின் தயாரிப்புகளை உலக சந்தைக்கு எடுத்து சொல்ல இந்த ஒலிம்பிக் சரியான ஒரு பாதை வகுத்து தரும்.

மேலும் பல விடயங்களில் சீனாவின் பொருளாதாரத்தை சீர்தூக்கும் இந்த ஒலிம்பிற்கு சீனா தயரான விதம் சில வரிகளிலோ சில பக்கங்களிலோ எழுதிவிட முடியாது.

சமீபத்தில் தொலைகாட்சியில் தனது நாட்டு வீரர்களை சீனாவிற்கு அனுப்பிய கீரிஸ் நாடு தனது வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி மகிழ்ந்தது. ஆம் போருக்கு செல்லும் போர்வீரர்கள் போல் அனைத்து வீரர் வீரங்களைகளும் உடைகள் அனிந்து கீரீஸின் முக்கிய நகரமெங்கும் வலம் வந்த வீரர்களுக்கு கிரீசீண் நாகரமக்கள் அளித்த வரவேற்பு அவர்களின் மனதை உற்சாகமளித்த அந்த உற்சாகமே வீரர்களின் மனதில் ஒரு பெரிய உத்வேகத்தை அளித்து விட்டது. அந்த வீரர்களுக்கு நம் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்த நமது நாட்டிற்கு ஏதாவது ஒரு பதக்கம் வாங்கி கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு பாதி வெற்றியை பெற்று தந்து விடும்.

இந்தியாவின் நிலை என்ன என்று பார்க்கலாமா. இன்றுவரை எத்தனை வீரர்கள் எந்த எந்த பிரிவில் விளையாட செல்கிறார்கள் சீனா செல்கிறார்கள் என்ற பட்டியல் வெளியிடவில்லை. சின்ன துணுக்கு செய்தி போன்று 51 விளையாட்டு வீரர்கள் சீனா செல்கிறார்கள் என்று நேற்று வெளியானது. ஆனால் உண்மையில் இந்திய அரசு சார்பாக மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாததிற்கு முன்பே சீனாவில் முககமிட்டு விட்டார்கள். இவர்கள் என்ன விளையாட்டு வீரர்களின் பயிற்சி யாளர்களா?? சில பயிற்சியாளர்களுக்கு விமான டிக்கேடை நீங்களே போட்டு கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்ததால் வீரர்களை கணத்த மனதுடன் அனுப்பி வைத்தார்கள்.

உயரதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் சொக்காரர்கள் சொந்தக்காரர்கள் மற்றும் தூரத்து உறவினர்கள் கூட சீனாவை சுற்றிபார்க கிளம்பிவிட்டார் அதுவும் நமது வரிப்பணத்தில்.
மிகுந்த நம்பிக்கை வத்த மோனிகாதேவியை டோப்பிங் விவகாரத்தில் மாட்ட விட்டு அவரை பலிகடாவாக்கிவிட்டது. அதற்கு எந்த அமைப்பும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களுக்கு தெரியாமல் ஊக்கமருந்து கொடுக்கபட்டுள்ளது என்ற குற்றசாட்டும் விளையாட்டுதுறையில் வலம் வருகிறது. எது எப்படியோ சானியாமிர்சா என்னும் நட்சத்திர வீரங்கனையை சுத்தமாக விரட்டிய சக்தி இந்தியவீற்கு பதக்கம் வாங்கி தந்து பெயர் வாங்கிவிடுவாரோ என்ற நினைப்பில் மேனிகாவிற்கும் வேட்டு வைத்துவிட்டது.

ஆனால் இன்று உலகமே ஒலிம்பிக் திருவிழாவை வகைவகையாக ஆராய்ந்து மக்களுக்கு அறிவித்து கொண்டிருக்கும் போது இந்தியாமட்டும் சிரிலங்காவில் நடக்கும் டெஸ்ட்மேட்சை விலாவரியாக படம்பிடித்து கொண்டிருக்கிறது.
இந்த‌ விட‌ய‌த்திலும் திரு லாலு பிர‌சாத‌ அவ‌ர்க‌ள் பாராட்டுக்குறிய‌வ‌ர்க‌ள் ஆகிவிட்டார்.
ஆம் த‌ன‌து இலாகாவான‌ இர‌யில் வேயில் இருந்து பிஜிங் சென்ற‌ 15 வீர‌க‌ளுக்கும் முன்ன‌னி ப‌த்திரிக்கைக‌ளின் புகைப்ப‌ட‌த்துட‌ன் வாழ்த்து தெரிவித்த‌து.

ஆனால் பாவ‌ம் வ‌ருமான‌மோ????? இல்லாத‌ விளையாட்டு துறையின் ம‌க்க‌ள் தொட‌ர்பு அதிகாரிக‌ளோ த‌ங்க‌ள் நாட்டு வீர‌ர்க‌ள் சீனா செல்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ஒரு வாழ்த்து சொல்ல‌ கூட‌ முடிய‌வில்லை. என்ன‌ செய்ய‌ அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் குடும்ப‌த்துட‌ன் ஒரு மாத‌த்திற்கு முன்பே சீனா விஜ‌ய‌ம் சென்றுவிட்ட‌ன‌ர்.

எது எப்ப‌டியோ இய‌ங்காம‌ல் இருக்கும் விளையாட்டு துறைக்கு மூடுவிழா ந‌ட‌த்தி அத‌ற்கு செல‌வ‌ழிக்கும் ப‌ண‌த்தை ச‌ர‌த்ப‌வாரின் மாநில‌மான‌ ம‌க‌ராஸ்டிராவிவ‌சாயிக‌ளின் ம‌றுவாழ்விற்கு ப‌ய‌ன் ப‌டுத்த‌லாம் என்ன‌ செய்ய‌ விவ‌சாய‌த்துறை அமைச்ச‌ரோ கிரிகேட்டில் மிக‌வும் பிஸியாக‌ உள்ளார்.


முக்கிய‌மான‌ ஒன்று இந்த‌ முறை ப‌ங்கேற்ற‌ சென்ற‌ ப‌ல‌வீர‌ர்க‌ளின் ச‌மீப‌த்திய‌ விளையாட்டுக‌ளின் த‌ங்க‌ளின் திற‌னை வெளிப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை. ஒலிம்பிக்கில் என்ன‌ செய்ய‌ போகிறார்க‌ள் என்றுதான் பார்க்க‌வேண்டும்.

காக்கை அம‌ர‌ ப‌ன‌ம்ப‌ழ‌ம் விழும்க‌தையாகிபோகாம‌ல் இருந்தால் ச‌ரி

July 27, 2008

த‌மிழால் நாம் வ‌ள‌ர்வோம்

தமிழால் நாம் நம்மால்

மொழி எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவியல்ல மொழி ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் முகவரியுமாகும். ஒரு இனத்தின் பண்பாட்டையும் வாழ்வியல் இலக்கணங்களையும் தனது பாரம்பரியங்களையும், தலைமுறைகு பெருமையுடன் எடுத்துறைக முதற்காரணி மொழிதான்

உலகம் தோன்றிய காலம்முதல் தனது பாரம்பரியத்தை உலகிற்கு தெரிவிக்க தங்கள் மொழியை பாடமாகவும் வளர்க்கவும் ஒவ்வொரு இனமும் காலம் காலமாக முயர்சித்து வருகிறது. மொழிக்காக பல போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள் என வரலாறு முழுவதும் நிறைந்துள்ளதை நாம் காண்கிறோம்.

வரலாற்றின் நேற்றைய பக்கங்களில் வந்த மொழிகூட தனது அடையாளத்தின் தலைமுறை பகிர்ந்து கொள்ள வகைபல செய்துவருகிறது. ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முதல் வந்த நம் தமிழுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன??

தமிழ் மொழியை பாதுகாப்பதில் இன்றைய பங்கில் ஈழத்தமிழர் தாய் மொழியாம் தமிழை பாதுகாக்க காட்டி வரும் ஆர்வம் தமிழகத்தமிழர்களிடம் குறைந்து வருவது கண்கூடு.

இன்று உலகெங்கிலும் தமிழுக்கு ஒரு வரைவு கிடைத்ததென்றால் இந்திய வரைபடத்தின் அடிப்பகுதியில் இருக்கும் தமிழன் இங்கிலாந்து சென்று அல்லது இல்லினாஸ் சென்றதினாலோ இல்லை. ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்ததால் தான் அயிரோப்பியம் முதல் ஆஸ்திரேலியம் வரை த‌மிழ் ந‌ங்கையின் ச‌ல‌ங்கை சிரிக்கிற‌து.


ஆம் ஈழ‌த்த‌மிழ‌ர்களின் பேச்சும் மூச்சும் த‌மிழ்தான், ( இந்திய‌ த‌மிழ்ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை க‌ண்டுகொள்வ‌து கூட‌ கிடையாது. ஒரு உதார‌ண‌ம் இல‌ண்ட‌னில் ஒரு க‌ம்பேனிக்கு ஒப்ப‌ந்த‌ முறையில் சென்ற‌ ஒரு இந்திய‌ த‌மிழ‌ன்.
தான் இருப்பிட‌ம் தேடி அலைந்த‌ பொழுது அத‌ற்கு உத‌விய‌ ஒரு ஈழ‌த்த‌மிழ‌ரிட‌ம் ம‌ருந்துக்கு கூட‌ த‌மிழில் பேச‌வில்லை)இவ‌ர் த‌மிழில் ப‌தில‌லித்தாலும் இள‌வ‌ட்ட‌ க‌ல‌ப்பு இர‌த்த‌தில் ஆங்கில‌ம்தான் நாவில் கேள்வியாக‌ விழுந்த‌து.


இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள் அய‌ல்நாடுக‌ளுக்கோ , அல்ல‌து இந்தியாவின் பிற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கோ செல்லும் போது த‌மிழ் ப‌ற்றி சிந்திப்ப‌வ‌ர் சில‌ர் தான். அதிலும் த‌மிழ் மொழியின் ந‌ல‌ம் பேனுப‌வ‌ர் மிக‌க்குறைந்த‌வ‌ர்க‌ளே.

அந்த‌ மிக‌ச்சில‌ருடைய‌ ப‌ணிக‌ளை பாராட்ட த‌மிழ‌ர்க‌ள் முன்வ‌ருகிறார்க‌ளோ இல்லையோ அவ‌ர்க‌ளின் ப‌ணியை குறை சொல்லும் கூட்ட‌த்திற்கு குறைவில்லை மொழியால் பிர‌ன்சு கார‌ர், மொழியால் சீன‌ர், மொழியால் ச‌ப்பானிய‌ர் ஒன்று ப‌ட்டு நிற்ப‌து போல் த‌மிழ‌ர் ஒன்று ப‌டும் கால‌ம் வ‌ர‌தா என்ற‌ ஏக்க‌ம் வ‌ள‌ர்கிற‌து.

நாம் அய‌ல் நாடோ அல்ல‌து ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளில் சென்று விட்டால் த‌மிழ் பேசுவ‌து குற்ற‌மாகிவிடுமா??
மும்பையில் ப‌ல‌ தாய்மார்க‌ள் என‌து பைய‌னுக்கு த‌மிழ் வ‌ராதுஎன்று பெருமையுட‌ன் கூறுவ‌தை காதால் கேட்டுள்ளேன்.
பிற‌ர் புல‌ம் பெய‌ரும் போது த‌ங்க‌ள‌து மொழி க‌லாச்சார‌ம் ஆகிய‌வ‌ற்றை த‌ங்க‌ளுட‌ன் எடுத்து செல்வ‌ர். இன்று நாம் கானும் பாண்டிச்சேரி(புதுசேரி) ம‌ற்றும் கோவா இத‌ற்கு ந‌ல்ல‌ உதார‌ன‌ம். இது பிர‌ன்சு ம‌ற்றும் போர்ச்சு கீது போன்ற‌ அய‌ல் நாட்டின‌ரின் பார‌ம்ப‌ரிய‌ வ‌ள‌ர்ப்பிட‌ங்க‌ள் என்றால் இன்றும் த‌ங்சையில் ம‌ராட்டிய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் ஆதிக்க‌த்தில் கிளைவிட்ட‌ ப‌ல‌ எச்ச‌ங்க‌ளை த‌ங்சையில் காண‌லாம். ஆனால் த‌மிழ‌ர் எங்கு சென்றாலும் ஒன்றை ம‌ட்டும் க‌ண்டிப்பாக‌ எடுத்து செல்கிறார்.
முத‌லில் வ‌ருவ‌து சாதி.
ஆம் ப‌டித்து ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல‌ பெற்று அய‌ல் நாட்டிற்கு கோடிக‌ளை கையாள‌ சென்றாலும் அவ‌ர்க‌ளின் ம‌ன‌தில் சாதி என்னும் கேடி ஒழிந்திருப்ப‌தை யாரும் ம‌றுக்க‌ முடியாது.

இந்திய‌ த‌மிழ‌ர் த‌ன‌து த‌மிழ் உண‌ர்வை ப‌ர‌ணில் போட்டுவிட்டுத்தான் விமாண‌மேறுகிறான், இர‌யில் பிடிக்கிறான்.இவ‌ர்க‌ளின் த‌மிழார்வ‌த்தை புதுப்பிக்க‌த்தான் ப‌ல‌ த‌மிழ் ச‌ங்கங்க‌ள் அய‌ல் நாடுக‌ளில் தோன்றி அங்கு ந‌ற்த‌மிழ்ப‌ணி செய்து வ‌ருகிற‌து.
உதார‌ன‌த்திற்கு சிட்னி த‌மிழ் ச‌ங்க‌ம் போன்ற‌ ப‌ல‌ ச‌ங்கங்கள்.


த‌மிழ் உண‌ர்வோடு இருங்க‌ள் த‌மிழ் பேசுங்க‌ள் என்றால் ப‌ல‌ர் பாடும் ஒரே பாட்டு. இதுதான் இந்த‌ க‌ட்டுரை எழுத‌ கார‌ண‌மான‌ பாட்டு த‌மிழ் என்ன‌ சோரா போடும் என்ப‌ர் சீன‌ர்க‌ளுக்கு சீன‌ மொழி சோறு போடுகிற‌து. இர‌ஸ்ய‌ர்க‌ளுக்கு இர‌ஸ்ய‌ மொழி சோறு போடுகிற‌து.த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌மிழ் மொழி சோறு ம‌ட்டும‌ல்ல‌ ந‌ம் வாழ்விற்கு ச‌ரியான‌ பாதையிட்டு ந‌ம்மை வ‌ள‌ர்ப்ப‌தும் த‌மிழ் தான்.

த‌மிழ‌க‌த்தை விட்டு வெளியே போகிற‌வ‌ர்க‌ளின் ஒரே ப‌தில் த‌மிழ் பிழைப்பிற்கு எப்ப‌டி உத‌வும் என்ப‌துதான்.முத‌லில் நாம் ஒன்றை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும் தாய்மொழி என்ப‌து பிழைப்பிற்கான‌ வ‌ழி அல்ல‌.
பிழைப்பிற்கு தேவை தொழில் அந்த‌ தொழில் த‌மிழில் க‌ற்கும் போது மேலும் ந‌ம‌து அறிவு மெருகூட்ட‌ப்ப‌டும்.

மேலும் விப‌ர‌மாக‌ ப‌ல‌ தொழில் க‌ல்விக‌ள் ஆங்கில‌த்தில் இருப்ப‌தால் ஆங்கில‌ம் தேவை ஆனால் அறிஞ‌ர் அண்ணா கூறிய‌து போல் ஆங்கில‌ம் நாம் வாசிக்க ப‌ய‌ண்ப‌டுத்தும் க‌ண்ணாடியாக‌வே இருக்க‌ வேண்டுமே த‌விர, க‌ண் இமையாக‌ இருத்த‌ல் கூடாது. ஆம் இன்று ப‌ல‌ க‌ண்க‌ளை போல் உள்ள‌ தாய்மொழியை ம‌றுத்து இமை க‌ளின் மேல் மைய‌ல் கொண்டுள்ள‌ன‌ர்.

பிழைபிற்காக‌ செல்லும் மாநில‌ங்க‌ளின் நாடுக‌ளின் மொழியை க‌ற்றுகொள்ளுங்க‌ள் வேண்டாம் என்றில்லை. ஒரு மொழியை க‌ற்ற‌ அதிக‌ நாட்க‌ள் ஆகாது கூடுமான‌வ‌ரை 3 மாத‌ங்க‌ள் ஆகும், இன்று அர‌பிய‌ நாடுக‌ளுக்கு செல்லும் த‌மிழ‌ர்க‌ள் என்ன‌ அராபி க‌ற்றுகொண்டா செல்கின்ற‌ன‌ர்.

இத‌ற்காக‌ த‌மிழ‌க‌த்தில் அராபிய‌ மொழியையோ அல்ல‌து வ‌ட‌மொழியையோ க‌ற்று கொடுங்க‌ள் என்று சில‌ர் சொல்வ‌தில் எந்த‌ ஒரு ம‌க‌த்துவ‌ம் இல்லாத‌ வெட்டி சொல்.
அதே போல் தாய்மொழியை ம‌ற‌ந்து தான் பிற‌மொழி பேச‌வேண்டுமா இதைத்தானே ப‌ல‌ செய்கின்ற‌ன‌ர்.

சென்னையை சேர்ந்த‌ ஒரு ஐடி குடும்ப‌ம் திரும‌ண‌ம் முடிந்து கொய்ரோவில் ப‌ல‌ வ‌ருட‌மாக‌ ப‌ணிபுரிகின்றார் அவ‌ருக்கும் இர‌ண்டு குழ‌ந்தைக‌ள். அவைக‌ள் இர‌ண்டும் அழ‌காக‌ அராபி பேசுகிற‌து. ஆங்கில‌ பேசுகிற‌து ஏன் அவ‌ரின் ம‌னைவியின் தாய்மொழியான‌ தெலுங்கு பேசுகிற‌து. ஆனால் த‌மிழ் செப்பு லேது ஏன் என்று கேட்டால் அவ‌ர‌து ம‌னைவியின் பெற்றோர்க‌ள் அடிக்க‌டி போனில் பேசும் போது தெலிங்கிலேயே செப்பிய‌தால் குழ‌ந்தைக்கு தெலுங்கு வ‌ந்து விட்ட‌து, ஆனால் அம்ம‌ பைய‌னே பைய‌னோட‌ பெற்றோரோ குழ‌ந்தைக‌ளிட‌ன் , ஹைய் சோனூ ஹ‌வ் ஆர் யீ , என‌ ஆங்கில‌த்தில் ம‌ட்லாடிய‌தால் இன்று குழ‌ந்தை த‌மிழை ம‌ற‌ந்து போன‌து. மை பாத‌ர் ஃப்ரொம் கும்கோண‌ம் , ப‌ட் இ டோண்ட் ஸ்பீக் ட‌மிழ் என‌ அழ‌காக‌ சொல்ல‌ கார‌ண‌ம் அவ‌ங்க‌ப்ப‌ன் தானே அவ‌ர் ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ரின் பேற்றோரும் கார‌ண‌மாகிவிட்டார்க‌ள்.
தெலுங்கு தாத்தா பாட்டி போனில், உண்டிகாரா சோனூ, தேவுடு கும்பிடு, டீ வீ சாஸ்தி டைமு சூட‌ண்டி என‌ தெலுங்கில் உறையாட‌ த‌மிழ் குடும்ப‌மோ குழைந்தைக‌ளிட‌ம் ஆங்கில‌த்தில் உறையாட‌ல் விளைவு த‌லைமுறை ம‌ற‌ந்த‌ த‌மிழ்.

தாய் மொழிக்க‌ல்வியோ தாய்மொழி ப‌ற்றோ த‌லைசிற‌ந்த‌து என‌ ப‌ல‌ அறிஞ‌ர் சொல்லி இருக்க‌ த‌மிழ‌ன் ம‌ட்டும் ப‌ட்ட‌றிவு ஒன்றே போதும் தாய்மொழி த‌ந்த‌ த‌மிழ‌றிவு வேண்டாம் என‌ ப‌லர் வாழ‌ க‌ண்ணார‌ காண்கிறோம்.

இன்று இந்தியாவை எடுத்துகொண்டால் வ‌ட‌க்கே இருக்கும் பெரிய‌ பெரிய‌ அதிகாரிக‌ள் த‌ங்க‌ள‌து இள‌ங்க‌லை வ‌ரை த‌மிழ் வ‌ழியில் ப‌டித்த‌வ‌ர்கள்.இந்திய‌ தேர்த‌ல் ஆனைய‌த்தின் துணை ஆனைய‌ர் திரு பால‌ கிருஸ்ன‌ன்( இந்திய‌ அர‌சானை தேர்வை கூட‌ த‌மிழில் எழுதிதான். இன்று அப்ப‌த‌வியை அல‌ங்க‌ரிக்கிறார்.

ஏன் ந‌ம‌து முன்னாள் சான‌திப‌தி திரு அப்துல் காலாம் கூட‌ இள‌ங்க‌லை அறிவிய‌ல் த‌மிழ்வ‌ழி ப‌யின்ற‌வ‌ர்தானே.

இன்று அய‌ல் நாடுக‌ளில் வாழும் 50 வ‌ய‌திற்கும் மேற்ப‌ட்ட‌ உய‌ர‌திகாரிக‌ள் , அலுவ‌ல‌ர்க‌ள் எல்லாம் த‌ன‌து ப‌ள்ளிப்ப‌ருவ‌த்தில் த‌மிழ் மூல‌ம் ப‌யின்ற‌வ‌ர்க‌ள் தானே.
ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்து முடிந்த‌ இ ஆ பே தேர்வில் தேரிய‌வ‌ர்க‌ள் 79 பேரும் த‌மிழில் எழுதி தேரிய‌வ‌ர்க‌ள் தானே.


த‌மிழால் முடியும் நீங்க‌ள் த‌மிழ் பேசாம‌ல் இருப்ப‌தால் த‌மிழுக்கு ந‌ட்ட‌ ம‌ல்ல‌ ஆனால் நாளைய‌ த‌லைமுறையான‌ த‌மிழ்பேசாத‌ த‌மிழ் த‌லைமுறைக‌ளுக்கு பெரும் பாதிப்பு ஏற்ப‌ட்டு இர‌ண்டாம் கெட்ட‌ த‌ண்மை ஏற்ப‌டும்.

த‌மிழால் நாம் வ‌ள‌ர்வோம், ந‌ம்மால் ???????