தமிழால் நாம் நம்மால்
மொழி எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவியல்ல மொழி ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் முகவரியுமாகும். ஒரு இனத்தின் பண்பாட்டையும் வாழ்வியல் இலக்கணங்களையும் தனது பாரம்பரியங்களையும், தலைமுறைகு பெருமையுடன் எடுத்துறைக முதற்காரணி மொழிதான்
உலகம் தோன்றிய காலம்முதல் தனது பாரம்பரியத்தை உலகிற்கு தெரிவிக்க தங்கள் மொழியை பாடமாகவும் வளர்க்கவும் ஒவ்வொரு இனமும் காலம் காலமாக முயர்சித்து வருகிறது. மொழிக்காக பல போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள் என வரலாறு முழுவதும் நிறைந்துள்ளதை நாம் காண்கிறோம்.
வரலாற்றின் நேற்றைய பக்கங்களில் வந்த மொழிகூட தனது அடையாளத்தின் தலைமுறை பகிர்ந்து கொள்ள வகைபல செய்துவருகிறது. ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முதல் வந்த நம் தமிழுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன??
தமிழ் மொழியை பாதுகாப்பதில் இன்றைய பங்கில் ஈழத்தமிழர் தாய் மொழியாம் தமிழை பாதுகாக்க காட்டி வரும் ஆர்வம் தமிழகத்தமிழர்களிடம் குறைந்து வருவது கண்கூடு.
இன்று உலகெங்கிலும் தமிழுக்கு ஒரு வரைவு கிடைத்ததென்றால் இந்திய வரைபடத்தின் அடிப்பகுதியில் இருக்கும் தமிழன் இங்கிலாந்து சென்று அல்லது இல்லினாஸ் சென்றதினாலோ இல்லை. ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்ததால் தான் அயிரோப்பியம் முதல் ஆஸ்திரேலியம் வரை தமிழ் நங்கையின் சலங்கை சிரிக்கிறது.
ஆம் ஈழத்தமிழர்களின் பேச்சும் மூச்சும் தமிழ்தான், ( இந்திய தமிழ்ர்கள் ஈழத்தமிழர்களை கண்டுகொள்வது கூட கிடையாது. ஒரு உதாரணம் இலண்டனில் ஒரு கம்பேனிக்கு ஒப்பந்த முறையில் சென்ற ஒரு இந்திய தமிழன்.
தான் இருப்பிடம் தேடி அலைந்த பொழுது அதற்கு உதவிய ஒரு ஈழத்தமிழரிடம் மருந்துக்கு கூட தமிழில் பேசவில்லை)இவர் தமிழில் பதிலலித்தாலும் இளவட்ட கலப்பு இரத்ததில் ஆங்கிலம்தான் நாவில் கேள்வியாக விழுந்தது.
இந்திய தமிழர்கள் அயல்நாடுகளுக்கோ , அல்லது இந்தியாவின் பிற நகரங்களுக்கோ செல்லும் போது தமிழ் பற்றி சிந்திப்பவர் சிலர் தான். அதிலும் தமிழ் மொழியின் நலம் பேனுபவர் மிகக்குறைந்தவர்களே.
அந்த மிகச்சிலருடைய பணிகளை பாராட்ட தமிழர்கள் முன்வருகிறார்களோ இல்லையோ அவர்களின் பணியை குறை சொல்லும் கூட்டத்திற்கு குறைவில்லை மொழியால் பிரன்சு காரர், மொழியால் சீனர், மொழியால் சப்பானியர் ஒன்று பட்டு நிற்பது போல் தமிழர் ஒன்று படும் காலம் வரதா என்ற ஏக்கம் வளர்கிறது.
நாம் அயல் நாடோ அல்லது மற்ற மாநிலங்களில் சென்று விட்டால் தமிழ் பேசுவது குற்றமாகிவிடுமா??
மும்பையில் பல தாய்மார்கள் எனது பையனுக்கு தமிழ் வராதுஎன்று பெருமையுடன் கூறுவதை காதால் கேட்டுள்ளேன்.
பிறர் புலம் பெயரும் போது தங்களது மொழி கலாச்சாரம் ஆகியவற்றை தங்களுடன் எடுத்து செல்வர். இன்று நாம் கானும் பாண்டிச்சேரி(புதுசேரி) மற்றும் கோவா இதற்கு நல்ல உதாரனம். இது பிரன்சு மற்றும் போர்ச்சு கீது போன்ற அயல் நாட்டினரின் பாரம்பரிய வளர்ப்பிடங்கள் என்றால் இன்றும் தங்சையில் மராட்டிய மன்னர்களின் ஆதிக்கத்தில் கிளைவிட்ட பல எச்சங்களை தங்சையில் காணலாம். ஆனால் தமிழர் எங்கு சென்றாலும் ஒன்றை மட்டும் கண்டிப்பாக எடுத்து செல்கிறார்.
முதலில் வருவது சாதி.
ஆம் படித்து பட்டங்கள் பல பெற்று அயல் நாட்டிற்கு கோடிகளை கையாள சென்றாலும் அவர்களின் மனதில் சாதி என்னும் கேடி ஒழிந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்திய தமிழர் தனது தமிழ் உணர்வை பரணில் போட்டுவிட்டுத்தான் விமாணமேறுகிறான், இரயில் பிடிக்கிறான்.இவர்களின் தமிழார்வத்தை புதுப்பிக்கத்தான் பல தமிழ் சங்கங்கள் அயல் நாடுகளில் தோன்றி அங்கு நற்தமிழ்பணி செய்து வருகிறது.
உதாரனத்திற்கு சிட்னி தமிழ் சங்கம் போன்ற பல சங்கங்கள்.
தமிழ் உணர்வோடு இருங்கள் தமிழ் பேசுங்கள் என்றால் பலர் பாடும் ஒரே பாட்டு. இதுதான் இந்த கட்டுரை எழுத காரணமான பாட்டு தமிழ் என்ன சோரா போடும் என்பர் சீனர்களுக்கு சீன மொழி சோறு போடுகிறது. இரஸ்யர்களுக்கு இரஸ்ய மொழி சோறு போடுகிறது.தமிழர்களுக்கு தமிழ் மொழி சோறு மட்டுமல்ல நம் வாழ்விற்கு சரியான பாதையிட்டு நம்மை வளர்ப்பதும் தமிழ் தான்.
தமிழகத்தை விட்டு வெளியே போகிறவர்களின் ஒரே பதில் தமிழ் பிழைப்பிற்கு எப்படி உதவும் என்பதுதான்.முதலில் நாம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் தாய்மொழி என்பது பிழைப்பிற்கான வழி அல்ல.
பிழைப்பிற்கு தேவை தொழில் அந்த தொழில் தமிழில் கற்கும் போது மேலும் நமது அறிவு மெருகூட்டப்படும்.
மேலும் விபரமாக பல தொழில் கல்விகள் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலம் தேவை ஆனால் அறிஞர் அண்ணா கூறியது போல் ஆங்கிலம் நாம் வாசிக்க பயண்படுத்தும் கண்ணாடியாகவே இருக்க வேண்டுமே தவிர, கண் இமையாக இருத்தல் கூடாது. ஆம் இன்று பல கண்களை போல் உள்ள தாய்மொழியை மறுத்து இமை களின் மேல் மையல் கொண்டுள்ளனர்.
பிழைபிற்காக செல்லும் மாநிலங்களின் நாடுகளின் மொழியை கற்றுகொள்ளுங்கள் வேண்டாம் என்றில்லை. ஒரு மொழியை கற்ற அதிக நாட்கள் ஆகாது கூடுமானவரை 3 மாதங்கள் ஆகும், இன்று அரபிய நாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் என்ன அராபி கற்றுகொண்டா செல்கின்றனர்.
இதற்காக தமிழகத்தில் அராபிய மொழியையோ அல்லது வடமொழியையோ கற்று கொடுங்கள் என்று சிலர் சொல்வதில் எந்த ஒரு மகத்துவம் இல்லாத வெட்டி சொல்.
அதே போல் தாய்மொழியை மறந்து தான் பிறமொழி பேசவேண்டுமா இதைத்தானே பல செய்கின்றனர்.
சென்னையை சேர்ந்த ஒரு ஐடி குடும்பம் திருமணம் முடிந்து கொய்ரோவில் பல வருடமாக பணிபுரிகின்றார் அவருக்கும் இரண்டு குழந்தைகள். அவைகள் இரண்டும் அழகாக அராபி பேசுகிறது. ஆங்கில பேசுகிறது ஏன் அவரின் மனைவியின் தாய்மொழியான தெலுங்கு பேசுகிறது. ஆனால் தமிழ் செப்பு லேது ஏன் என்று கேட்டால் அவரது மனைவியின் பெற்றோர்கள் அடிக்கடி போனில் பேசும் போது தெலிங்கிலேயே செப்பியதால் குழந்தைக்கு தெலுங்கு வந்து விட்டது, ஆனால் அம்ம பையனே பையனோட பெற்றோரோ குழந்தைகளிடன் , ஹைய் சோனூ ஹவ் ஆர் யீ , என ஆங்கிலத்தில் மட்லாடியதால் இன்று குழந்தை தமிழை மறந்து போனது. மை பாதர் ஃப்ரொம் கும்கோணம் , பட் இ டோண்ட் ஸ்பீக் டமிழ் என அழகாக சொல்ல காரணம் அவங்கப்பன் தானே அவர் மட்டுமல்ல அவரின் பேற்றோரும் காரணமாகிவிட்டார்கள்.
தெலுங்கு தாத்தா பாட்டி போனில், உண்டிகாரா சோனூ, தேவுடு கும்பிடு, டீ வீ சாஸ்தி டைமு சூடண்டி என தெலுங்கில் உறையாட தமிழ் குடும்பமோ குழைந்தைகளிடம் ஆங்கிலத்தில் உறையாடல் விளைவு தலைமுறை மறந்த தமிழ்.
தாய் மொழிக்கல்வியோ தாய்மொழி பற்றோ தலைசிறந்தது என பல அறிஞர் சொல்லி இருக்க தமிழன் மட்டும் பட்டறிவு ஒன்றே போதும் தாய்மொழி தந்த தமிழறிவு வேண்டாம் என பலர் வாழ கண்ணார காண்கிறோம்.
இன்று இந்தியாவை எடுத்துகொண்டால் வடக்கே இருக்கும் பெரிய பெரிய அதிகாரிகள் தங்களது இளங்கலை வரை தமிழ் வழியில் படித்தவர்கள்.இந்திய தேர்தல் ஆனையத்தின் துணை ஆனையர் திரு பால கிருஸ்னன்( இந்திய அரசானை தேர்வை கூட தமிழில் எழுதிதான். இன்று அப்பதவியை அலங்கரிக்கிறார்.
ஏன் நமது முன்னாள் சானதிபதி திரு அப்துல் காலாம் கூட இளங்கலை அறிவியல் தமிழ்வழி பயின்றவர்தானே.
இன்று அயல் நாடுகளில் வாழும் 50 வயதிற்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் , அலுவலர்கள் எல்லாம் தனது பள்ளிப்பருவத்தில் தமிழ் மூலம் பயின்றவர்கள் தானே.
சமீபத்தில் நடந்து முடிந்த இ ஆ பே தேர்வில் தேரியவர்கள் 79 பேரும் தமிழில் எழுதி தேரியவர்கள் தானே.
தமிழால் முடியும் நீங்கள் தமிழ் பேசாமல் இருப்பதால் தமிழுக்கு நட்ட மல்ல ஆனால் நாளைய தலைமுறையான தமிழ்பேசாத தமிழ் தலைமுறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இரண்டாம் கெட்ட தண்மை ஏற்படும்.
தமிழால் நாம் வளர்வோம், நம்மால் ???????
July 27, 2008
Subscribe to:
Posts (Atom)